முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு...சிங்கள இனவெறியின் இழிசெயல் - திருமாவளவன் கண்டனம்
யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர்.
சென்னை: யாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர் நிகழ்ந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்ந்த இனப்படுகொலையின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைப்பகுதியில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நினைவிடம் தற்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 8, 2021
சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாக க் கண்டிக்கிறது.
தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் #சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம்.
தமிழர் அடையாளம் காப்போம். pic.twitter.com/6bjv97lD8O
தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம் என்றும் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications