துரைமுருகன் முயற்சி எல்லாம் வீணாய்ருச்சோ.. ஒரே ஒரு கார்ட்டூன் போட்டு.. தெறிக்க விட்டுட்டாங்களே!

திமுக கூட்டணியில் பாமக இல்லை என்றே கருததப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்படின்னா, துரைமுருகன் இதுவரை மேற்கொண்ட முயற்சி எல்லாம் வீணாகிவிட்டதா என்று தெரியவில்லை.. ஒரே ஒரு கார்ட்டூனை போட்டு, பாமகவை தெறிக்க ஓடவிட்டுவிட்டது திமுக.. அதாவது கூட்டணி கதவை திமுக மூடிவிட்டது!

கடந்த மாதம் துரைமுருகன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எம்எல்ஏ தேர்தலில் சீட்கள் போதவில்லை என வெளியேறுவர்... அங்கே இருக்கும் சிலரும் திமுக கூட்டணிக்கு வருவர்... இதனால் திமுக கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது" என்றார்.

கூட்டணியை பற்றி துரைமுருகன் பேசிய பேச்சு பலவித யூகங்களை அப்போது கிளப்பி விட்டது.. துரைமுருகன் யாரை சொல்கிறார்? யார் வெளியேறுவர்? யார் கூட்டணிக்குள் வருவர்? என்கிறார் என்று ஒரு தரப்பு மண்டை குழம்பி கொண்டிருக்கிறது.. என்றாலும், பெரும்பாலானோர், பாமகவைதான் துரைமுருகன் சொல்லி இருப்பார் என்று அனுமானமாக சொன்னார்கள்.

பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

அதற்கு காரணம், திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த கையுடன் பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே துரைமுருகன் முயற்சிப்பதாக ஒரு செய்தி கசிந்த நிலையில், மறுபடியும் துரைமுருகன் பாமக தரப்பை இழுக்கும் முயற்சியை மேற்கொள்வதாகவும் சமீபத்தில் சொல்லப்பட்டது.

 கூட்டணி?

கூட்டணி?

இதனிடையே பாமகவின் மூத்த தலைவர் ஒருவரும் சமீபத்தில் துரைமுருகனை சந்தித்து பேசவும், அதற்கேற்றபடியே டிவி விவாதங்களில் திமுகவுடன் பாமக பேச்சு நடத்துகிறது என்ற ஒரு தகவலை சொல்லவும், மொத்தமாக சேர்ந்து இந்த கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்றே முடிவானது.. ஆனால், அவ்வளவு யூகங்களும் இப்போது சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

முரசொலி

முரசொலி

கடந்த 2 நாட்களாகவே திமுகவின் முரசொலி நாளிதழில் பாமகவுக்கு எதிரான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.. "மறந்து போச்சா மருத்துவரே'" என்ற தலைப்பில், தொண்டர்களுக்கு ராமதாஸ் செய்து கொடுத்த, 5 சத்தியங்கள் காற்றில் பறக்க விட்டது பற்றி குறிப்பிட்டு, அது தொடர்பாக கேள்விகளும் கேட்கப்பட்டு, அக்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் அந்த கார்ட்டூனில், "வன்னியர்கள் ஒன்றுபட்டால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம்" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தொண்டர் ஒருவரின் முதுகில் உட்கார்ந்து கொண்டு சொல்கிறார்.

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அதற்கு, அந்த தொண்டர், "இத்தனை வருஷமாக, அதை தானய்யா செய்துக் கிட்டிருக்கோம்... எங்களுக்கு முதுகு வலி தான் மிச்சம்" என்கிறார். இப்படி கட்டுரையும், கார்ட்டூனையும் போட்டு கேலி செய்ததை கண்டு பாமக கடும் கொந்தளிப்பில் இருக்கிறதாம்.. பாமகவுடன் கூட்டணி இல்லை என்பதையே திமுக இவ்வாறு தெளிவுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 பாமக கோபம்

பாமக கோபம்

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடனேயே கூட்டணி அமைக்க, பாமக விரும்பும் பட்சத்தில், "கூட்டணி ஆட்சிக்கே இடமில்லை" என்று அமைச்சர் ஜெயக்குமார் ஸ்ட்டிராங்காக சொல்லிவிட்டார்.. இப்போது திமுகவும் இப்படி கார்ட்டூன் போட்டு மறுப்பு தெரிவித்துவிட்டதால், பாமக இனி என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+