முக்கால் நிர்வாணம்.. வக்கிர புத்தியோடு பேசிய எச்.ராஜா! ‘தாவல் திலகம்’.. குஷ்புவை விளாசிய முரசொலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவித்தும் அவர் மீது வழக்கு போடப்பட்ட பின்னும் அவர் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கிற குஷ்பு, எச். ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசியதற்கு அமித்ஷாவும் பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா? என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

சென்னை ஆர்கேநகர் மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு திமுக எம்பி கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு

இந்நிலையில் பாஜக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பால்விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய குஷ்பு, சைதை சாதிக் பேச்சு குறித்து மேடையில் அமர்ந்திருந்த அமைச்சரும், தமிழக முதல்வரும் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறினார். மேலும் திமுகவில் பெண்களை மதிப்பதில்லை எனவும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக பாஜக தலைவர்களும் பேசி வந்தனர். இந்நிலையில் தன்னைப் பற்றி ஆபாசமாக பேசியதற்காக எச்.ராஜா குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டாரா என திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

 ‘தாவல் திலகம்”

‘தாவல் திலகம்”

அதில் ,"பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 'தாவல் திலகம்" குஷ்பு அவர்கள். ஆர்ப் பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றி பேசாமல் தனது வாய்த்துடுக்கைக் காண்பித்துள்ளார். நடிகர் திலகம். நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கி றோம்: இது என்ன 'தாவல் திலகம்' என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும். அந்த அம்மையார் அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்குத் தாவியதால் 'தாவல் திலகம் என்ற பட்டம் பொருத்தமாக இருக்குமல்லவா:

முதலமைச்சர்

முதலமைச்சர்

அந்த 'தாவல் திலகம்'தான் தேவை யில்லாமல் தனிப்பட்ட முறையில். முதலமைச்சர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார். "முதலமைச்சர் தேர்தல் அறிக்கையைப் படிக்கவில்லை: எழுதிக் கொடுப் பதைத் தான் அவர். படிப்பது வழக்கம்" எனத் தேவையின்றி முதல்வர் குறித்து விமர்சித்துள்ளார். மின்கட்டண உயர்வு 'ஷாக்' அடிக்கிறது. பால் விலை உயர்வால் வயிறு எரிகிறது - எனத் துடித்துத் துவண்டுள்ளார்; அம்மையார் பா.ஜ.க. வின் தேசிய அளவில் பதவி வகிப்பவர்.

 கனிமொழி கருணாநிதி

கனிமொழி கருணாநிதி

மைக் கிடைத்து விட்டது என்பதால் எதையும் பேசிவிடலாம் என்று தரம் தாழ்ந்து பேசினால் கொடுத்த வழியிலேயே அதற்கு பதிலும் வரும் என்பதை அரசியலில் புதிய வேடம் கட்டி உள்ள குஷ்பு உணர வேண்டும். திமுக கழகப் பேச்சாளர் ஒருவர் இந்த அம்மையார் குறித்து பேசுகையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் அம்மையார் மனதை புண்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட போது அந்த பேச்சாளர் கண்டிக்கப்பட்டார். அவர் பேசியதற்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டு, அவரும் வருத்தமும் தெரிவித்தார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அந்த பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

இந்த நிலையில் அவர் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மேடையில் இருந்த அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று பேசி உள்ளார். பல நேரங்களில் வாய் நீளம் காட்டுவது பல சங்கடங்களை உருவாக்கிடும் என்பதை அம்மையார் உணராது பேசுவது 'சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த' கதையாக மாறிவிட்டது. ஓவராக சில காட்சிகளை 'ரீ ஆக்ட்' செய்தால் அது விரசமாகிவிடும் என்பது சிறந்த நடிகையான அம்மையாருக்கு தெரியாமல் போனது ஏன்?. அம்மையார் அரசியலில் மைலேஜ் எடுக்கும் நோக்கில் பேசியது இப்போது சேம் சைடு கோல் போல ஆகிவிட்டது. அவரைப் பற்றி அதாவது இன்றைய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பற்றி அன்றைய தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா பேசிய அருவருக்கத்தக்க பேச்சு மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக வளம் வர தொடங்கிவிட்டது.

எச்.ராஜா

எச்.ராஜா

அப்பப்பா அம்மையாரின் தனிப்பட்ட வாழ்க்கை அலசி அவர் எப்படியெல்லாம் ஆனந்தப்பட்டு இருக்கிறார் என்பது குஷ்பு அவர்கள் பார்வைக்கும் சென்றிருக்கும் என எண்ணுகிறோம். ஒருவேளை அவரது கவனத்திற்கு சென்றிருக்காவிட்டால் அந்த பேச்சில் ஒரு சில பகுதிகளை தருகிறோம். முடைநாற்றம் எடுக்கும் வகையில் 'நரகல்' நடையில் பேசும் அந்தப் பேர்வழி பிஜேபியின் கடைநிலை பேச்சாளர் கூட அல்ல. மாநில அளவில் கூட அல்ல. தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வகித்து அந்த கட்சியை வளர்த்துக் கொண்டிருப்பவர். அவரோடு சேர்ந்து தான் தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்ய குஷ்பு புறப்பட்டு இருக்கிறார்.

 வக்கிர புத்தி

வக்கிர புத்தி

எச்.ராஜாவின் பேட்டி," ஒரு அம்மா அந்த அம்மாவுக்கு பேஷன்னா.. அதான் கல்யாணம் பண்ணிக்காமல் எப்படி வேண்டுமானாலும் குடித்தனம் பண்ணிக்கலாம்னு பேசி மாட்டிட்டாங்களே.. அவங்க பேர் என்ன?" என பிராமண பாஷையில் வாயெல்லாம் பல் தெரிய அவர் கேட்க அவர், முன்னிருந்த கூட்டம் ஒரு சிலர் 'குஷ்பு' என கத்திட." ஆமாம் குஷ்பு சுந்தர்" என இவர் கிண்டலடித்து மகிழ்கிறார். மேலும் குஷ்பு ஏற்ற வேடங்களில் கேலி செய்யும் வகையில் அவரது படங்களில் எவ்வளவு தூரம் வக்கிரங்கள், ஆபாசங்கள், அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணங்களாக. எவ்வளவு கேவலமான படங்கள்.." இப்படியெல்லாம் திருமதி குஷ்பு அவர்களின் குடும்ப வாழ்க்கையும் திரை வாழ்க்கையையும் வக்கிர புத்தியுடன் வர்ணித்த வீடியோக்கள் மீண்டும் பவனி வரத் தொடங்கிவிட்டன.

புரிந்து கொள்வாரா?

புரிந்து கொள்வாரா?

திமுக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவித்தும் அவர் மீது வழக்கு போடப்பட்ட பின்னும் அவர் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கிற குஷ்பு எச். ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசிய தற்கு அமித்ஷாவும் பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா? அல்லது இனியாவது கேட்பாரா? திமுக கழகத்தினர் பெண்களை கேவலமாக மதிக்கின்றனர். நடத்துகின்றனர் என்று பேசி மறந்துவிட்ட பாஜக ராகவன் கதைகளை எல்லாம் மீண்டும் கிளறிவிட எண்ணுவதில் அம்மையாருக்கு என்ன ஆனந்தமோ? குஷ்பூ பேச்சை பொருட்படுத்தக் கூடாது என்று இருந்தும் கொஞ்சம் அளவுக்கு மீறி வாய்நீளம் காட்டத் தொடங்கி விட்டதால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான சிறிய விளக்கங்களை பதிவாக பதிவு செய்துள்ளோம். குஷ்பூ புரிந்து கொண்டு நடப்பார் என எண்ணுகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+