யப்பா இன்னொரு அண்ணாமலையா.. தமிழக பாஜக தாங்காது.. ஆளுநர் மீது முரசொலி பாய்ச்சல்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ முகமைக்கு மாற்றியதில் என்ன குறை கண்டார் ஆளுநர் என கேள்வி எழுப்பி முரசொலியில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து முரசொலியில் "என்ன குறை கண்டார் ஆளுநர்?" என்ற தலைப்பில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவசியமற்ற புகாரை ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லியிருக்கிறார். "கோவை வழக்கை என்ஐஏவுக்கு வழங்கியதிில் ஏன் இந்த காலதாமதம் என்பதுதான் என்னுடைய கேள்வி" என பொத்தாம்பொதுவாக பேசி இருக்கிறார்.
ஆளுநர் பொறுப்பில் இருப்பவருக்கு முதலில் எங்கே எதை பேச வேண்டும் என்ற புரிதல் முதலில் இருக்க வேண்டும். ஒரு தனியார் நிறுவனம் தனது யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியை திறந்து வைப்பதற்காக இவரை அழைத்திருக்கிறது. அந்த இடத்தில் போய் இப்படி கேட்டுள்ளார். ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசிடம் கேள்வி எழுப்பும் முறை இதுதானா? அதுவும் இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அதுவும் உளவுத் துறையில் இருந்தவர். இப்படிக் கேட்பதுதான் இவரது பணிக்காலத்தில் பயன்படுத்திய முறையா?

தமிழக காவல் துறை
இந்த சம்பவத்தை பொறுத்தவரையில் தமிழக காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டது. நான் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த போது பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இநதியா என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்று ெனக்கு தமிழகக் காவல் துறைதான் தகவல் அளித்தது. அந்த வகையில் நாட்டில் உள்ள காவல் துறைகளில் தமிழகக் காவல் துறை சிறப்பாகச் செயல்படக் கூடியது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வழக்கை என்ஐஏவுக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதுதான் என் கேள்வி என பேசியிருக்கிறார்.

காவல் துறை சிறப்பு
தமிழகக் காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டது... என சொல்லிவிட்டு, "ஆனால் " போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டதா, ஒரு மாதம் ஆகிவிட்டதா ஒரு வாரம் ஆகிவிட்டதா, மூன்றாவது நாளே தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கை மாற்றிவிட்டால் முதல்வர். இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? அக்டோபர் 23 ஆம் தேதி அன்று காலையில் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதி காலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதில் எந்த தாமதமும் இல்லை.

இந்த வழக்குகளை பாருங்க
1. Delhi Court Complex வெடிவிபத்து நடந்த 23.12.2021. என்ஐஏ வழக்கு பதிந்த நாள் 13.1.2022
2. Bomb Explosion at PS Khejuri WB வெடிவிபத்து நடந்த 4.1.22 என்ஐஏ வழக்குப் பதிவு செய்த நாள் 25.1.22
3. BOMB Explosion at Naihati WB வெடிவிபத்து நடந்த 27.1.22 என்ஐஏ வழக்குப் பதிவு செய்த நாள் 08.2.22
4. Low intensity blast in police bazar of Shillong City வெடிவிபத்து நடந்த 30.1.22 என்ஐஏ வழக்குப் பதிவு செய்த நாள் 4.3.22
5. Loud Explosion at an automobile shop durtlang வெடிவிபத்து நடந்த 18.03.22 என்ஐஏ வழக்குப் பதிவு செய்த நாள் 20.7.2022

3 நாட்களில் நடவடிக்கை
இந்த வகையில் பார்த்தால் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து எல்லாம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளார்கள். ஆனால் இங்கே மூன்றாவது நாளே ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? காரில் இருந்த சிலிண்டர் வெடித்து காருக்குள் இருந்தவர் மரணம் அடைகிறார். உடனடியாக அந்த இடத்தில் இருந்த அனைத்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டது. அப்போதே உடனடியாக டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், உளவுத் துறை தலைவர் டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட அனைவரும் கோவைக்கு வந்துவிட்டார்கள். அன்றைய தினமே அந்த கார் யாருடையது என கண்டறியப்பட்டது. அன்றைய தினமே அந்த நபர் யாரென கண்டறியப்பட்டார்.

முபின் வீடு சோதனை
அன்றைய தினமே அந்த நபரின் வீடு சோதனையிடப்டப்டது. அவர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் அன்றைய தினமே கைப்பற்றப்பட்டது. 6 தனிப்படைகள் இதற்காக உடனடியாக அமர்த்தப்பட்டது. அந்த மாவட்டமே போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. எவரும் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டார்கள். மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டது. அருகில் இருந்த மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டார்கள் காவல் துறை அதிகாரிகள். சுற்றிலும் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை வைத்து அந்த நபரோடு தொடர்பில் இருந்த அனைவரும் மறுநாள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். இதில் நேரடி தொடர்புடைய 5 பேர் உடனடியாக மறுநாளே கைது செய்யப்பட்டார்கள்.

அடிப்படைவாத தீவிரவாதிகள்
மாநிலம் முழுவதும் இது போன்ற அடிப்படைவாத தீவிரவாதிகளை கண்காணிக்க காவல் துறை உத்தரவிட்டது. இது போன்ற பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் நினைப்பது போல் யாரும் அலட்சியமாக இருக்கவில்லை. எந்த பெரிய சம்பவம் நடந்தாலும் உள்ளூர் போலீஸ் வழக்குப் பதியும். அது பயங்கரவாத நிகழ்வாக இருந்து வெளிமாநிலம் வெளிநாடு அளவில் விசாரிக்க வேண்டியதாக இருந்தால் மாநில அரசுக்கு இது தொடர்பான கோரிக்கையையும் உள்ளூர் போலீஸ்தான் அனுப்பி வைக்க வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டம், தேதிய புலனாய்வு முகமைச் சட்டப்பிரிவு ஆகியவை சேர்க்கப்பட வேண்டிய வழக்காக இருந்தால் ஒன்றிய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும். அதுதான் இதில் நடந்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்?

குறை சொல்வதாக இருந்தாலும்
குறை சொல்வதாக இருந்தாலும் நாமும் அதிகமாகக் கேட்போம். இப்போது இறந்து போன நபரை 2019ஆம் ஆண்டு விசாரித்தது இதே முகமைதானே. அப்போது இருந்தது அதிமுக ஆட்சி, அவரை அந்த ஆட்சியோ என்ஐஏவோ தொடர்ந்து கண்காணித்ததா? 2008 ஆம ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் ஆகும். இதில் திருத்தம் செய்ய வேண்டுமானால் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டே செய்திருக்க வேண்டும். ஆனால் 2019ஆம் ஆண்டுதான் திருத்தம் செய்தார்கள். 5 ஆண்டுகள் கழித்துதான் திருத்தம் கொண்டு வர மனம் வந்ததா? ஏன் இந்தக் காலதாமதம் என்று நாமும் கேட்கலாமே?

பயங்கரவாதிகள்
பலரையும் பயங்கரவாதிகள் என்று அறிவித்திருந்தார்கள். அதில் 2019 இல் விசாரிக்கப்பட்ட இந்த நபர் ஏன் இல்லை, இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். பாஜக ஆட்சியில் தேசிய புலனாய்வு முகமைச் சட்டத்திற்கு திருத்தம் வந்த போது திமுக ஆதரித்து வாக்களித்தது என்பதை மறந்துவிட வேண்டாம். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் உறுதியாக இருப்பது திமுகவும் அதன் ஆட்சியும். அதன் மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் இது போன்ற கருத்துகளை பொதுவெளியில் பொறுப்பற்றுப் பேசக் கூடாது. அவர் இன்னொரு அண்ணாமலையாக ஆக வேண்டாம். தமிழக பாஜக தாங்காது!. இவ்வாறு முரசொலியில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம்











Click it and Unblock the Notifications