Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஆண்டுகளில் தமிழகத்தில் கொலைகள் இவ்ளோ குறைஞ்சு போச்சு.. டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் கொலை வழக்குகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார். 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் கொலைகள் குறைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால், 2023 ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் கொலை, காயம் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன.

Murder Cases in Tamil Nadu Drop Significantly Over 4 Years DGP Shankar Jiwal

மேலும், கொலைகளின் நீண்டகால போக்கின் பகுப்பாய்வின் படி 2017 - 2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 1745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன, 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைவாக கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகியுள்ளன.

உண்மையில், கடந்த 12 ஆண்டுகளில் எந்தவொரு ஆண்டையும் விட 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 161 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தாலும், இது 2024 ஆம் ஆண்டில் மாத சராசரியுடன் ஒப்பிடும் போது கொலை வழக்குகள் 130 ஆகக் குறைந்துள்ளன, இது மேலும் 2025 ஆம் ஆண்டில் (ஏப்ரல் வரை) மாதத்திற்கு 120 கொலை வழக்குகளாகக் குறைந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில், காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவான 2024 ஆம் ஆண்டில், ரவுடி கொலைகளும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன. 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக, முந்தைய ஆண்டின் (2024) முதல் நான்கு மாதங்களில் 501 கொலைகளுடன் ஒப்பிடும்போது, 483 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

திடீர் தூண்டுதல், குடும்ப தகராறுகள், திருமணத்தை தாண்டிய உறவு போன்றவற்றால் நிகழும் பிற வகையான கொலைகளைத் தடுப்பது கடினம் என்பதால், ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கொலைகளைக் குறைப்பதிலும், பிற வகையான மனித உடலுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதிலும் நல்ல பலனைத் தந்துள்ளன.

1. ரவுடிகளுக்கு எதிரான அதிகபட்ச தண்டனைகள்: நீதிமன்ற விசாரணை முடியும் தருவாயில் உள்ள வழக்குகளில் தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ள வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, தண்டனை பெறுவதற்காக வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவதை கண்காணிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

2. திட்டமிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (OCIU) நெருக்கமான கண்காணிப்பானது ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் குறைப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.

3. அதிக எண்ணிக்கையிலான (குண்டர்) தடுப்புக்காவல்கள். கடந்த 2024 ஆம் ஆண்டில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சரித்திரப் பதிவேட்டு ரவுடிகள் (3645) தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டில் 1929 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் 2484 சரித்திரப் பதிவேடு ரவுடிகளும், 2022 ஆம் ஆண்டில் 3380, 2023 ஆம் ஆண்டில் 2832 மற்றும் 2024 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3645 சரித்திரப் பதிவேடு ரவுடிகளும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் (ஏப்ரல், 2025 வரை), 1325 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4. தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் கவனம் செலுத்துதல் மற்றும் பயனுள்ள கண்காணிப்பிற்காக சரித்திரப் பதிவேடு ரவுடிகளை மறு வகைப்படுத்திய பிறகு, A+ மற்றும் A பிரிவின் கீழ் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது 50% க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. இது ரவுடிகள் மீது கவனம் செலுத்தவும் அவர்களை திறம்பட கண்காணிக்கவும் உதவுகிறது.

5. ஒவ்வொரு தீவிர செயல்பாடுடைய சரித்திரப் பதிவேடு ரவுடிக்கும் காவல் நிலைய சரகத்தில் DARE (Drive Against Rowdy Element) அதிகாரிகளை நியமித்தல். இந்த DARE அதிகாரிகள், ரவுடிகள் தொடர்பான சம்பவங்களைத் தடுக்க, அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

6. பழிவாங்கும் மற்றும் ரவுடிகள் தொடர்பான கொலைகளைத் தடுக்கவும், சிறைக்குள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறவும், சிறைச்சாலைகளில் ரவுடிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில், சிறைச்சாலைக்குள் ரவுடிகள் மற்றும் பழிவாங்கும் கொலைகளைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

ரவுடிகள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் பழிக்குப் பழி மற்றும் ரவுடி கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+