அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்களில் அரசு வழக்கறிஞரின் சான்றொப்பம் கட்டாயம்: முருகானந்தம் சரவெடி
சென்னை: கோர்ட்டில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடம் சான்றொப்பம் பெறுவது கட்டாயம் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார்.
அரசு தலைமைச் செயலர் என்.முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது:

ஹைகோர்ட்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள் மற்றும் வழக்குக்கு தேவையான பிற ஆவணங்களில் சென்னை உயர் நீதிமன்ற ரிட் விதி 9-ன் பிரகாரம் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அல்லது நோட்டரி மற்றும் சான்று உறுதி ஆணையர்கள் மூலமாக சான்றொப்பம் பெற வேண்டும்.
ஆனால் அரசு சார்ந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்களில் வழக்குகளில் எதிர்மனுதாரர்களாக இருக்கும் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுமே சான்றொப்பம் செய்து தாக்கல் செய்யும் நடைமுறை நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சான்றொப்பம்: ஆனால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் தலைமையிலான அமர்வு, அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களிலும் ரிட் விதி 9-ன் பிரகாரம் தேவையான சான்றொப்பம் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மாநில அரசு ப்ளீடர் வாயிலாக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
எனவே இனி உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குகளில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள், வழக்குத் தொடர்பான ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடமே சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பமிடும் அரசு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக இருக்கக் கூடாது.
முத்திரைகள்: மேலும் சான்றொப்பமிடும் அரசு வழக்கறிஞர்கள் தங்களது கையெழுத்துடன், அவர்களது பெயர், முத்திரை, பதிவு எண், பதிவு செய்துள்ள பார் கவுன்சில், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதில் தெளிவாக குறிப்பிட வேண்டும். எனவே இதற்கு தேவையான ஏற்பாடுகளை உயர் நீதிமன்ற மாநில அரசு ப்ளீடர், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications