அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானாமே.. அறிவிப்பும் வெளியாக போகுதாம்.. பரபரக்கும் களம்!
தமிழக பாஜக தலைவராக முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: தமிழக பாஜகவின் தலைவராக நான்கைந்து பேர்கள் அடிபட்டாலும், ஓங்கி ஒலிப்பது கோவை முருகானந்தத்தின் பெயராகவே இருக்கிறது.
மாநில தலைமை பதவி காலியானதை அடுத்து புதிய மாநில தலைவர் நியமிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 2 தினங்களாகவே கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதா, சிபி ராதா, கருப்பு முருகானந்தம், ஏபி முருகானந்தம், நயினார் நாகேந்திரன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர்கள் ரேஸில் வந்து போகின்றன.

நியமனம்
இதில் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு ஏபி முருகானந்தத்துக்கு இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏபி முருகானந்தம் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். பாஜகவின் அகில இந்திய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்.. இளைஞரணியின் தேசிய துணை தலைவர்.

பரிந்துரைகள்
புதுமுகம் ஒருவரை தலைவராக நியமிக்கலாம் என்ற பாஜக தலைமையின் விருப்பத்துக்கும் பொருத்தமானவராக முருகானந்தம் கருதப்படுகிறார். அதனால்தான், இவரையே பாஜக தலைவராக நியமிக்கப்படுவதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

நாளை?
அநேகமாக வெள்ளிக்கிழமை அதாவது நாளைக்கு இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதுவரை தமிழகத்தில் யார் தலைவர் என்ற இழுபறி நிலையே நீடிப்பதுகூட ஒரு வகையில் நல்லதுதான் என பாஜக தலைமை விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

பரபரப்பு
ஒருவேளை முருகானந்தம் தேர்வானால், வாய்ப்பு கேட்டு லிஸ்ட்டில் உள்ள மற்றவர்கள் நிலை என்னாகும், எந்த மாதிரியான நிலைப்பாட்டை, முடிவை எடுப்பார்கள் என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications