Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்துக்களை பிறப்பால் தரம் பிரிக்கும் சனாதனம்.. ஐயரே சொல்லிட்டாரே! பரபரப்பை பற்ற வைத்த ஜேம்ஸ் வசந்தன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி பேச்சை தொடர்ந்து சனாதனா தர்ம விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அதுகுறித்து பதிவிட்டு உள்ளார்.

அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "பரபரப்பை உண்டாக்கியிருக்கிற இந்த 'சனாதனம்' விவாதப் பொருளைக் குறித்து நானும் ஒரு சிறு ஆய்வு செய்தேன், அந்தக் கோட்பாடு என்னவென்பதை விளங்கிக்கொள்ள. இது மதத்தோடு மட்டும் இருக்கவேண்டியதா அல்லது சமூகமே பொதுவாக விவாதிக்க வேண்டியதா என்பதைத் தெரிந்துகொள்ள. அடிப்படை சமஸ்கிருத நூலின் சில மொழிபெயர்ப்புகள் இங்லிஷிலும், தமிழிலும் உள்ளன.

Music composer James vasanthan facebook post about sanatana dharama

இதைப் பொறுப்பாகப் படிப்பவர் பிராமணரும், திராவிடக் கட்சியினர் மட்டுமே என்பதையும் தெரிந்துகொண்டேன், ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
SANATANA DHARMA
AN ADVANCED TEXT BOOKOF HINDU RELIGION AND ETHICS
PUBLISHED BY THE BOARD OP TRUSTEES
CENTRAL HINDU COLLEGE
BENARES
1904
என்கிற பல்கலைக்கழகப் பாடப்புத்தகம் எளிமையான இங்லிஷில் அந்தக் காலக் கோனார் தமிழ் உரை போல விளக்குகிறது.

"THE BASIS OF SANATANA DHARMA. The Shrutih, consisting of the FourVedas is the final authority in the Aryan Religion, and these four Vedas form in their entirety THE VEDA, THE PERFECT KNOWLEDGE, revealed by Brahma, seen by the Rishis, and clothed in words by Them for the benefit of the Aryan peoples." என்கிற முன்னுரையுடன் தொடங்குகிற இந்தப் புத்தகம் எட்டாவது அத்தியாயத்தில் விவகாரமான அந்தத் தலைப்புக்கு வருகிறது.

CHAPTER VIII - THE FOUR CASTES, 'வர்ணாசிரமம்' என்கிற அந்த நால்வகை மனிதரின் பிறப்பையும், கடமையையும், பொறுப்புகளையும் விளக்குகிறது. அவர்களுடைய எல்லையையும் வரையறுக்கிறது. எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு ஐயரிடமும் இதைக்குறித்து விளக்கம் கேட்டேன். எண்பதைக் கடந்தவர். வேதங்களை ஐயமறக் கற்றறிந்தவர். பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், ஆனாலும் முற்போக்கு சிந்தனையுள்ளவர், சின்ன வட்டங்களுக்குள் சுருங்கிப் போகாதவர்.

Music composer James vasanthan facebook post about sanatana dharama

"சனாதன தர்மம் என்பது வாழ்வியல் முறையை நுணுக்கமாக போதிக்கும் அற்புதமான அறநெறி நூல். ஆனால், இந்த அரசியல்வாதிகள் எதிர்க்கிற செய்திகளும் அதிலுண்டு என்பதுதான் உண்மை. சிலர் அதை மறைக்க முயல்கிறார்கள், சிலர் அதை நியாயப்படுத்துகிறார்கள், பலர் இப்படி ஒன்று இருப்பதையே அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்".

"இக்கோட்பாடுகளை அறிந்து, உணர்ந்து, பின்பற்றி வாழ்பவனே மெய்யான ஆரியன் என்பதுதான் இந்நூலின் அடிப்படை" என்றார். "இது இந்துக்களின் வேத நூல் என்று சொல்ல முற்படுகிறார்கள். ஆனால் அந்த இந்துக்களையே பிறப்பால் தரம் பிரித்து வைத்துவிட்டு, நீயும் நானும் இந்து என்றால் அவன் எப்படி ஏற்றுக்கொள்வான்?" என்று முடித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+