இஸ்லாமிய சகோதர சகோதரிகளே.. 'மிலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்'.. பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்!
சென்னை: மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் மிலாது நபி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட் வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் கிபி 632 ரபிவுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார்.
நபிகள் நாயகம் பிறப்பும், இறப்பும் ஒரே நாள் ஆகும். இந்த நாளே மிலாடி நபி என்று கொண்டாடப்படுகிறது.

இன்று மிலாடி நபி
முஹம்மது நபி சவுதி அரேபியாவின் மக்காவில் 570 CE இல் பிறந்ததாக நம்பப்படுகிறது. எல்லா மனிதர்களுக்கும் அன்பு மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பிய அல்லாஹ்வின் கடைசி தூதர் நபிகள் நாயகம். இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தற்போது மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து
மிலாடி நபியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு
இறைத்தூதர் முகமது நபி அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், அவர் வாழ்ந்து காட்டிய வழி முறைகளையும், அவர் சொல்லிச் சென்ற நெறிமுறைகளையும் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மிலாதுன் நபி நல்வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின்
ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ''அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்னாளான மீலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.

திருநாள் நல்வாழ்த்துகள்
அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த மீலாதுன் நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications