Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அமைச்சர் எங்களுக்கு மாங்கா தந்துட்டு போறார்.. எல்லோரும் மாசமாவா இருக்காங்க".. எகிறிய பெண்!

வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எங்களுக்கு அமைச்சர் எதுவுமே உதவி பண்ணல.. முக்கியமா இஸ்லாமியர்களுக்கு அவர் எதுவுமே செய்யல.. இஸ்லாமியருக்கு தர்றதா இருந்தா ரம்ஜானுக்கு தானே உதவி தந்திருக்கணும்? இல்லேன்னா பக்ரித்துக்கு தானே தந்திருக்கணும்?" என்று ஆவேசமாக இஸ்லாமிய பெண் ஒருவர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார்.. இந்த வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    'ரம்ஜானுக்கு செய்திருக்கலாம்ல.. பக்ரீத்துக்காச்சும் பண்ணிருக்கலாம்ல'.. அமைச்சர் மீது பாயும் பெண்கள்!

    அதிமுகவில் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 2ஆக, 3ஆக பிரிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில், திருச்சி மாநகர், புறநகர், வடக்கு என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் மாநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமனமும் செய்யப்பட்டார்.. இவரது கட்டுப்பாட்டில்தான் திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகளும் அடங்கியுள்ளது.

    அமைச்சர்

    அமைச்சர்

    இந்நிலையில் திருச்சி பாலக்கரை பகுதி அதிமுக செயலாளராக இருந்த கலீல் ரகுமான் என்பவரை அந்த பதவியிலிருந்து நீக்கிய அமைச்சர் வெல்லமண்டி, அவருக்கு பதிலாக சுரேஷ்குப்தா என்பவரை நியமித்தார்.. இதுதான் பிரச்சனையைக வெடித்தது.

    இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    இதனை கண்டிக்கும் வகையில் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அமைப்பு சார்பில் திருச்சி மாநகரம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.. "இஸ்லாமியர் என்பதற்காக கலீல் ரகுமான் என்பவரிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனையும், அதிமுகவையும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பார்கள்" என்று பகிரங்கமாகவே அந்த போஸ்டரில் தெரிவித்திருந்தனர்.

    போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    இது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதனால் மாவட்ட அதிமுகவே கொந்தளித்ததுடன், இந்த போஸ்டர் யுத்த விவகாரம் தலைமைக்கும் பறந்தது. இதன் தொடர்ச்சியாக இஸ்லாமி ஜமாத் அமைப்பு ஒட்டப்பட்ட போஸ்டருக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமில்லை என பகிரங்கமாக கடிதம் ஒன்றை வெளியிட்டது. இதுவும் அதிமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இஸ்லாமிய பெண்மணி

    இஸ்லாமிய பெண்மணி

    இந்நிலையில் இன்று திடீரென ஆழ்வார்தோப்பு சேர்ந்த மகளிர் அணியில் உள்ள ஒரு இஸ்லாமிய பெண்மணி அமைச்சருக்கு எதிராக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.. அதில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொரோனா சமயத்தில், மக்களுக்கு நிறைய உதவி திட்டம் செய்தேன்னு சொல்லிட்டு வர்றாரு.. இதுக்காக போஸ்டர், கட்அவுட் எல்லாம் வெச்சிருக்காங்க.

    உதவிகள்

    உதவிகள்

    ஆழ்வார்தோப்பிலும் அமைச்சர் நிவாரண உதவி தந்தாராம்.. நான் அந்த பகுதியை சேர்ந்தவள் என்பதால் இதை கேட்கிறேன், "யாருங்க சொன்னா, அவர் நிவாரண உதவி தந்தாருன்னு.. கொரோனாவால, லாக்டவுனில் 4 மாசமா இருக்கோமே.. நிவாரண உதவி தந்தவர், அப்பவே தந்திருக்கலாமே? இப்ப எதுக்கு போஸ்டர் அடிச்சி தெரு தெருவா ஒட்டியிருக்காங்க.. யாரை ஏமாத்தறாங்க?

    மாங்காய்

    மாங்காய்

    அவர் கூடவே இருக்கிறாங்க இல்லே, அவங்களுக்கு வேணும்னா செஞ்சிருப்பார்.. எங்களுக்கு என்னங்க தந்தாரு? வெறும் மாங்கா தான் தந்தார்.. இங்க எல்லாரும் என்ன மாசமாவா இருக்கோம்? இஸ்லாமியருக்கு உதவிகளை செஞ்சோம்ன்னு சொல்றாங்களே? இஸ்லாமியருக்கு தர்றதா இருந்தா ரம்ஜானுக்கு தானே தந்திருக்கணும்? இல்லேன்னா பக்ரித்துக்கு தானே தந்திருக்கணும்.. எங்களுக்கு எதுவுமே தரல.. ஊழலை மறைக்க என்ன வேணும்னாலும் செய்வாங்களா? யாரை ஏமாத்தறாங்க?" என்று ஆவேசமாக பேசுகிறார். இந்த வீடியோதான் வைரலாகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+