சூத்திரன் பிரிவை உருவாக்கியது இஸ்லாமியரும் வெள்ளைக்காரர்களும் தான்.. இயக்குனர் பிரவீன் காந்தி பேச்சு
சென்னை: சூத்திரன் பிரிவை உருவாக்கியது இஸ்லாமியர்களும் வெள்ளைக்காரர்களும்தான் என்றும், பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள், வளர்ச்சி கண்டதற்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது என்றும் இயக்குனர் பிரவீன் காந்தி ஆவேசமாக பேசினார்.
பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள், வளர்ச்சி கண்டதற்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது என்று இயக்குனர் பிரவீன் காந்தி ஆவேசமாக பேசினார். ரஞ்சித் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தை C/O கவுண்டம்பாளையம் படத்தின் ஆடியோ லான்ச் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பிரவீன் காந்தி பேசும் போது கூறியதாவது:-

சினிமா தளர்ச்சி ஆகிவிட்டது: ஜாதிப்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு எதிராக எப்போதுமே நான் ஸ்டேட்மண்ட் கொடுத்துக்கொண்டே இருப்பேன். சாதியை சொல்லவே கூடாது.. சாதியை பேசவே கூடாது. எந்த சீட்டில் யார் உக்கார்ந்து இருக்கிறோம் என்று யாருக்குமே தெரியாது. பா.ரஞ்சித் என ஒரு டைரக்டர்.. வெற்றி மாறன்னு ஒரு டைரக்டர்.. இன்னும் சில டைரக்டர்கள்.. வளர்ச்சி கண்ட பிறகுதான்.. சினிமா தளர்ச்சி ஆகிவிட்டது.
முதன் முதலாக குரல் கொடுத்தார்: என் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று எப்படி எனக்கு தெரியும். எல்லோரும் சேர்ந்து விசில் அடிக்கிறோம். சினிமாவில் சாதியை சொல்லவே கூடாது. சினிமாவில் சாதியை சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன். என்னுடைய கொள்கை அது. ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சியால் என்னுடைய சகோதரர், சகோதரிகள், தம்பி, தங்கைகள் சீர் கெட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று முதன் முதலாக குரல் கொடுத்தவர் நடிகர் ரஞ்சித்.
முதல் முறையாக குரல் கொடுத்தார். அதன்பிறகுதான் அதைப்பற்றிய விழிப்புணர்வு வந்தது. எதிர்காலத்தில் என் சகோதரன் கெட்டு போய்விடக்கூடாது என கலாசாரத்தை தூக்கி பிடித்த ரஞ்சித் நிச்சயமாக நல்ல படம் எடுத்து இருப்பார். அது சாதியை பின்னணியில் வைத்து இருந்தாலும் சமுதாயத்திற்கு கருத்து சொல்ல வேண்டிய படமாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும்.
சூத்திரன் யாரு?: நாம எல்லாம் ஒண்ணுங்க... சூத்திரன் யாரு... சூத்திரன் எப்போது தெரியுமா உருவானான். நம்ம உருவாக்கல.. இந்துக்கள் உருவாக்கல.. இங்கே படையெடுத்து வந்தான் பாருங்க.. அவன் உருவாக்கினான். இஸ்லாமியர்களும் அடுத்து வந்த வெள்ளைக்காரர்களும் உருவாக்கிய சூட்சமம் அது. சூத்திரன் என்பவன் சூத்திரத்தை அறிந்தவன். இறைவனுடைய சூத்திரத்தை அறிந்தவன்.
பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மன்.. பிராமணன்.. அப்படித்தான் நாம வச்சிருந்தோம்.. வேறுபாடே கிடையாது. கால்நடை பயிற்சி பண்ணுவான்.. விவசாயம் பண்ணுவான் அவ்வளவுதான் சூத்திரன். அவனை கீழ் நிலைக்கு மாற்றியது யாரு... இங்கே வந்து படையெடுத்தவன் தான் கீழ் நிலைக்கு கொண்டு போனான். இப்போது அவர்கள் கூடவே இவர்கள் சேர்ந்து கொண்டு நம்மளை கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரிவினை கிடையாது: அத்தனையும் மாற்ற வேண்டும். நாம் எல்லோரும் ஒன்னு.. இந்த எண்ணத்தை யார் படமாக எடுக்கிறார்களோ அவர்களை நாம் கொண்டாட வேண்டும். நிச்சயமாக ரஞ்சித் அவர்களுக்கும் இந்த படத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கும். நாம் அனைவரும் சமம்.. பிரிவினை கிடையாது. ஆனால் திட்டம் போட்டு நாடக காதல் செய்து நாட்டை நாசம் செய்யும் எவரையும் தண்டிக்கும் உரிமை நல்லவர்களுக்கு உண்டு" என்றார்.
பிரஷாந்த் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ஜோடி மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் வெளியான ரட்சகன் உள்ளிட்ட படங்களை பிரவீன் காந்தி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications