பள்ளிகளில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா! அரசுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள்!
சென்னை: பள்ளிகளில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும் என அரசுக்கு தமிழக தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசுக்கு வேண்டுகோள்: தேவர் ஜெயந்தியை தமிழக மாணவர் ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம் என அறிவித்து புகை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் அரசுக்கு விடுத்த வேண்டுகோள் வருமாறு;

தேசியம் -தெய்வீகம்: ''தேசியம் என் உடல், தெய்வீகம் என் உயிர் என்ற உயர்ந்த சிந்தனையுடன் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், தனி மனித ஒழுக்கத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பள்ளிகளில் அவருடைய தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும். அந்த வகையில் தேவர் ஜெயந்தியை தமிழக மாணவர் ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம் என அறிவித்து புகை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.''
தனிமனித ஒழுக்கம்: ''பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. தனிமனித ஒழுக்கத்திலும்,மனிதநேயத்திலும் வாழ்வியல் முறைகளிலும் இலக்கணமாக வாழ்ந்த சிறந்த சிந்தனையாளர். வளரும் தலைமுறையை வழிநடத்த அரசு துணை நிற்க வேண்டும்.'' இவ்வாறு தெரிவித்துள்ளார். முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவானது இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.
ஜாதி வட்டத்துக்குள்: இந்தச் சூழலில் இத்தகைய கோரிக்கையை தமிழக தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் முன் வைத்துள்ளது. முத்துராமலிங்கத் தேவரை குறுகிய ஜாதி வட்டத்துக்குள் அடைக்க சிலர் முயற்சிக்கக் கூடாது என்று தேவர் தேசியத் தலைவர் எனவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. இதனிடையே நாளை மறுநாள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பசும்பொன் செல்லவுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications