"நீங்க செய்த தப்புக்கு என் பிள்ளை தண்டனை அனுபவிச்சுட்டான்" உயிரிழந்த குழந்தையின் தாய் கண்ணீர்!
சென்னை: என் பிள்ளையை கொன்றுவிட்டீர்கள்.. நீங்க செய்த தப்புக்கு என் பிள்ளை தண்டனை அனுபவிச்சுட்டான்.. என்று கை அகற்றப்பட்டு உயிரிழந்த குழந்தையின் தாய் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் ஏற்றியபோது அதன் கை நிறம் மாறி அழுகியது. இதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என கூறிய மருத்துவர்கள் உடனே அந்த குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை அகற்றினர். இந்த சம்பவத்திற்கு மருத்துவமனையின் அலட்சியப்போக்கே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இதற்கு குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் அளித்தது. இந்த நிலையில், கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்த வேதனையில் கண்ணீர் மல்க தாய் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் குழந்தையின் கை போனதற்கு காரணம் என்ன?, கை செயலிழந்து போவதற்கு என்ன காரணம் என்று இப்போது வரை யாரும் சொல்ல மறூக்கிறார்கள்.
தப்பு செய்ததை அவர்கள் ஒத்துக்கொள்வதால் இப்போது வரை கை போனதற்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள். 3 நாட்களுக்கு முன்பு டீன் சார், டாக்டர்கள் உள்பட மொத்தம் 13 பேர் கவுன்சிலிங் கொடுத்தாங்க.. பிள்ளையின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும்.. ஸ்டண்ட் பன்றீங்களா என்றும் என்னிடம் கேட்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியும் பிள்ளையின் மூளை வரை இன்பெக்ஷன் ஆகிவிட்டது என்று. ஆபரேஷன் பண்ணுனா அவன் உயிருக்கு ஆபத்து என்றும் அவர்களுக்கு தெரியும்.. சர்ஜரி பண்ணா குழந்தை இறந்திடும் வழக்கை முடித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்..
எண்டோஸ்கோபி பண்ணணும்னு சொன்னா நீங்க ஒத்துக்கொள்ளவில்லை.. புதிதாக நீர் குழாய் வைக்க வேண்டும் என்று சொன்னாலும் நீங்க ஒத்துக்கொள்ளவில்லை.. என்ன தான் சொல்ல வாரீங்க என்று என்னிடம் கேட்டனர். அப்போது நான் டீன் சாரிடம் பேச வேண்டும் என்றேன்.. கை பிரச்சினையால் தானே இவ்ளோ பிரச்சினை என டீன் சாரிடம் கேட்டேன்.. அப்போது நரம்பு கட் ஆகிவிட்டது, நோய் எதிர்ப்பு சக்தி தன்மை போய்விட்டது.. அறுவை சிகிச்சை கூட செய்ய முடியாத நிலைமைக்கு குழந்தையின் உடல் இருக்கிறது என்றார்.
என் பிள்ளையின் இந்த நிலைமைக்கு என்ன சார் காரணம் என கேட்டதற்கு, இந்த அம்மா பின்னாடி இருந்து யாரோ சொல்லி கொடுத்து பேசுறீங்க என்கிறார். இதே பதிலை தான் முன்பு அமைச்சரும் பேசியிருந்தார் யாரோ சொல்லி கொடுத்து நான் பேசுறேன் என்று.. அப்போது உங்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம்?.. மேலும், அறிவியல் பேசினால் உங்களுக்கு புரியாது என்றும் நீங்க என்ன படித்திருக்கிறீர்கள் என்றும் கேட்டார்.
நான் எம்எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் என்றும், என் கணவரும் கம்யூட்டர் சயின்ஸ் என்றும் கூறினோம். அப்போது அவர்கள் ஏன் மைக்ரோ பயாலஜி படிக்கவில்லை என்று கூறினர். நான் மைக்ரோ பயாலஜி படித்திருந்தால் நான் ஏன் இங்க என் பையன கொண்டு வந்திருக்க போகிறேன். என் பிள்ளையை நானே காப்பாற்றி இருப்பேனே.. மைக்ரோ பயாலஜி படித்திருந்தால் எத்தனையோ குழந்தைகளை நான் காப்பாற்றி இருப்பேனே.. என் பிள்ளையை கொன்றுவிட்டீர்கள்..
இந்த நிலைமைக்கு நான் தள்ளப்பட்டிருக்க மாட்டேனே.. நீங்க செய்த தப்புக்கு என் பிள்ளை தண்டனை அனுபவிச்சுட்டான்.. நான் மீண்டும் அவரிடம் கேட்கிறேன்.. என் குழந்தையின் கை எதற்காக சார் போனது என்று.. அதற்கு குறை மாசம் என்று கூறுகிறார்கள்.. ஏன் சார் என் பிள்ளைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது.. அதற்கு குறை மாசம்.. ஏன் சார் என் பிள்ளை இந்த மாதிரி கிடக்குது.. அதற்கும் குறை மாசம் என்று கூறுகிறார்கள்.. இது ஒரு டீன் பேசுகிற பேச்சா?.. பெத்த தாய பார்த்து இப்படி கேட்கிறார்.
குழாய் வைக்கவா வேண்டாமா என்று கேட்டாங்க.. என் பிள்ளை சுய நினைவையே இழந்துவிட்டது.. கழுத்திற்கு மேல் சுயநினைவே இல்லை.. இந்த 3 நாளில் ஐசியூவில் இருந்த என் பிள்ளைக்கு மூளை வேலை செய்யவில்லை. ஹார்ட் வேலை செய்யவில்லை.. மருந்து கொடுத்து தான் வேலை செய்தாங்க.. நான் பக்கத்திலேயே தான் இருந்தேன்.. ஆண்டிபாயாட்டிக்கே வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.. அப்புறம் எப்படி ஆபரேஷன் செய்வாங்க..
உடற்கூறு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. இன்பெக்ஷன் ஆகிவிட்டது என்று சொல்லி என் குழந்தையின் கையை அன்றே எடுத்துவிட்டாங்க.. அப்புறம் எப்படி கை இல்லாமல் உடற்கூறு பரிசோதனை செய்து என்ன கிடைக்க போகிறது.. அவனிடம் அந்த கையே இல்லை பிறகு எப்படி எனக்கு ரிப்போர்ட் கொடுப்பீர்கள்.. சம்பந்தப்பட்ட கையே இல்லாமல் நீங்கள் எப்படி உடற்கூறு ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுப்பீங்க.. இவ்வாறு அவர் கூறினார்.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications