கலைஞர், நான், உதய், இன்பா! எங்கள் குடும்பமே உங்கள் ரசிகர்! தோனியை ஹேப்பியாக்கிய சிஎம்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் நான் முதல்வராக பங்கேற்கவில்லை கிரிக்கெட் ரசிகராக தோனியின் ரசிகராக வந்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: நான் தோனியின் ரசிகர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனது தந்தை மு.க ஸ்டாலின், எனது பேரப்பிள்ளைகளும் தோனியின் ரசிகர்கள்தான் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஐபிஎல் 2021 டி 20 கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களைப் பாராட்டி பேசினார்.
இந்த விழாவில் பங்கேற்றாலும் பெருமழை வெள்ளத்தைப் பற்றிதான் என் மனம் நினைத்துக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் நிவாரணம் கொடுப்பது பற்றிதான் நான் சிந்தித்துக்கொண்டுள்ளேன் என்று கூறிய முதல்வர், கோட்டையில் இருந்தாலும் குடிசையைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும் என்றும் எனது தனது தந்தையார் கூறியதை நினைவு கூர்ந்தார்.

கிரிக்கெட் விளையாட்டு
நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன்தான் என்று கூறிய முதல்வர் மு.க ஸ்டாலின் நானும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். காட்சி கிரிக்கெட் போட்டிகள் நடத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.

சென்னைவாசி தோனி
இந்த மேடையில் தோனி இருக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் சிறிய நகரில் இருந்து வந்துள்ளார். அவர் சென்னைக்காரர் போலவே மாறி விட்டார். தமிழ்நாட்டு ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறி விட்டார். தமிழர்கள் அனைவருக்கும் பிடித்த தோனியை ரொம்ப பிடிக்கும் என்று கூறிய முதல்வர் எனது தந்தைக்கும் அவரை பிடிக்கும் என்றார்.

நெருக்கடியில் இருந்து மீண்டவர்
எத்தனை நெருக்கடி இருந்தாலும் கூல் ஆக செயல்படுவார் தோனி என்று புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின், நெருக்கடியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றவர்கள் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டவர். தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் என்றாலே தோனிதான்
நாம் பச்சைத் தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் என்று நகைக்சுவையாக கூறினார் முதல்வர்.நீளமான முடிவைத்திருந்தார் தோனி. அவர் விளாசிய சதங்கள், ஹெலிகாப்டர் சாட் மறக்க முடியாது. டென்டுல்கருக்குப் பிறகு கிரிக்கெட் என்றாலே தோனிதான் நினைவுக்கு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
நான் அறிவிக்கும் திட்டங்களைப் பற்றி தினசரி சிக்சர் அடிப்பதாக சொல்வார்கள். அப்போதெல்லாம் தோனிதான் நினைவுக்கு வருவார். அவர் மிகச்சிறந்த ஆளுமைத்திறமைக் கொண்டவர். சென்னை சூப்பர் கிங்க் அணியின் வீரர்கள் திறமை சாலிகள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ஆளுமைக்கான வெற்றி என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். நல்ல அரசு அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ஊக்கமளிக்கும் என்றும் முதல்வர் கூறினார். அனைவரையும் வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications