"அண்ணி" முன்பு நிர்வாணமாக நின்ற மச்சினன்.. அலறிய பெண்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா..!
அண்ணிக்கு பாலியல் தொல்லை தந்த மச்சினனை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: இளம்பெண் தந்த, புகாரை பார்த்து சென்னை போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.. இது தொடர்பாக ஒருவரை கைதும் செய்துள்ளனர்.
எவ்வளவுதான் போக்சோவில் ஆபாச நபர்கள் கைதானாலும்கூட, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரே குடும்பம் என்றும் பாராமல், சொந்த ரத்த பந்தம் என்றும் பாராமல், குடும்ப உறவுகளின் அருமைகளையும் புரிந்து கொள்ளாமல், சில ஆபாச பேர்வழிகள், எல்லைகளை மீறி கொண்டு இருக்கிறார்கள்.

பச்சிளம் குழந்தை
இவர்கள் கண்ணுக்கு, பச்சிளம் குழந்தையும் ஒன்றுதான், பாட்டியும் ஒன்றுதான்.. ஆனால், இவர்கள் பெண்ணாக மட்டுமே இருந்தால் போதும் என்று நினைக்கும் போதையாளர்கள்.. எத்தனையோ குடும்பங்களில் அண்ணன் மனைவி அண்ணியை அம்மாவாக கருதும் மச்சினன்கள், மைத்துனர்கள் உண்டு.. அண்ணி என்பவர் இன்னொரு தாய் என்பதை நம் தமிழ்ச்சமூகம் அன்றிலிருந்து போற்றி வரும் நடைமுறை வழக்கமும்கூட.. நாகரீகம் மாறி வந்தாலும், அண்ணிக்குரிய மதிப்பு என்றென்றும் நம் நாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது.

மச்சினன்
ஆனால், சென்னையில் ஒரு மச்சினன் செய்த காரியத்தை பாருங்க.. அண்ணி என்றும் பாராமல் ஓவர் டார்ச்சர் தந்து வந்திருக்கிறார்.. பழைய திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. கணவருடன் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, ஒரு புகார் தந்திருந்தார்.. அந்த புகாரில் உள்ளதை பார்த்து போலீசாரே மிரண்டு போய்விட்டனர்.. அந்த புகாரில் சொல்லப்பட்டிருந்ததாவது:

அண்ணியை..
"என்னுடைய கணவரின் தம்பி, எனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.. சம்பவத்தன்று அண்ணி என்றும் பாராமல் என் முன்பு நிர்வாணமாக நின்று, ஆபாச செயல்கள் புரிந்து என்னை பாலியல் உறவுக்கு அழைத்தார். எனவே, மைத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார், அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச செயல்கள் புரிந்த மைத்துனரை கைது செய்தனர்..

ஆண் வாரிசு
அவர் பெயர் சுரேஷ்குமார்.. 39 வயதாகிறது.. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்... பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்... நேற்றுகூட உபியில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்கு வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி பல வருடங்களாகவே குழந்தை இல்லையாம்.. அவரது கணவருக்கு உடல்ரீதியான பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.

மாமியார்
ஆனால், அந்த பெண்ணின் மாமியாரோ, தன்னுடைய 2 இளைய மகன்களையும், மருமகளின் ரூமுக்குள் அனுப்பி பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.. அவர்களும் அண்ணி என்று பாராமல், அந்த பெண்ணை சீரழித்துள்ளனர்.. ஆண் வாரிசுக்காக அந்த மாமியார் இப்படி ஒரு காரியத்தை செய்தாராம்.. இறுதியில்,மருமகள் போலீசில் சென்று புகார் தந்ததையடுத்து, மாமியார் உட்பட 2 மச்சினன்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. அந்த அதிர்ச்சியே முடிவடையாத நிலையில், சென்னையில் இந்த அதிர்ச்சி மேலும் பதற்றத்தை கூட்டி வருகிறது... என்னத்த சொல்ல?!












Click it and Unblock the Notifications