அந்த பொண்ணோட கழுத்தை அறுத்திட்டேன்.. நானும் எலி மருந்தை குடிச்சுட்டேன்.. அதிர வைத்த இளைஞர்

என்னை வெறுத்ததால்தான் பெண்ணின் கழுத்தை அறுத்ததாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து-வீடியோ

    சென்னை: "சார்.. நான் அந்த பொண்ணை கழுத்தை அறுத்திட்டேன்" என்று இளைஞர் சொன்னதும் அதிர்ந்தனர் போலீசார. "சார்.. நானும் எலி மருந்தை குடிச்சிட்டேன்" என்றதும் தூக்கி வாரிப் போட்டது போலீசாருக்கு.

    சென்னையில் நேற்று நடந்த சம்பவம் இது. திருவொற்றியூரை சேர்ந்த பாரதி என்பவர் ஒரு பைக் ஷோரூமில் வேலை பார்த்து வந்திருக்கிறார். பைக் வாங்க அங்கே வந்த பாலாஜி என்பவர் பாரதிக்கு பழக்கமாகி உள்ளார். பழக்கம் லவ் ஆனது.

    இந்த லவ் மேட்டர் வீட்டுக்கு தெரியவந்தது. வழக்கம்போல் சத்தம் போட்டார்கள். எதிர்த்தார்கள். கடைசியில், பிள்ளைகள் ஆசைப்படுகிறார்களே என்று இரு வீட்டிலும் கல்யாணத்துக்கு சம்மதமும் சொல்லி விட்டார்கள்.

    மதம் மாறுவது யார்?

    மதம் மாறுவது யார்?

    பாலாஜி இந்து மதத்தை சேர்ந்தவர். பாரதி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். கல்யாணம் செய்வதானால் யாராவது ஒருவர் மதம் மாற வேண்டும் என்று முடிவானது, ஆனால் யார் மாறுவது என்பதுதான் பிரச்சனையே எற்பட்டது. இந்த பிரச்சனைதான் போய்க் கொண்டிருந்தது.

    கல்யாணம் வேண்டாம்

    கல்யாணம் வேண்டாம்

    ஆனால் இதனிடையே பாலாஜியின் நடவடிக்கை பிடிக்காமல் போனதால் பாரதி அவருடன் பேசுவதை 2 மாதங்களாக குறைத்து கொண்டுள்ளார். அடிக்கடி பாலாஜி தண்ணி அடித்து விட்டு போதையிலே இருப்பதால் பாரதிக்கு இது சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் கல்யாணமே வேண்டாம் என்று பாரதி முடிவெடுத்தார்.

    வீட்டுக்கு சென்றார்

    வீட்டுக்கு சென்றார்

    இதுதான் பாலாஜிக்கு ஆத்திரமாகி விட்டது. எத்தனையோ முறை போன் செய்தாலும் பாரதி அட்டெண்ட் பண்ணவே இல்லை. அதனால் வீட்டுக்கு போய் ரெண்டில் ஒன்னு தெரிஞ்சிட்டு வரலாம்னுதான் நேற்று முன்தினம் பாரதி வீட்டுக்கு போனது.

    கழுத்து அறுத்தார்

    கழுத்து அறுத்தார்

    வீட்டில் பாரதி தனியாக இருந்துள்ளார். பாலாஜியை பார்த்ததும் பேச மறுத்துள்ளார். பாக்கவே பிடிக்கவில்லை என்றும் சொல்லி உள்ளார். அதனால்தான் கிச்சனில் இருந்து கத்தியை எடுத்து வந்து பாரதியின் கழுத்தை அறுத்துவிட்டு வெளியே ஓடிவந்து விட்டார். பாரதியின் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கழுத்தை அறுத்தேன்

    கழுத்தை அறுத்தேன்

    இதனிடையே, டாஸ்மாக்குக்கு போன பாலாஜி விஷம் சாப்பிட்டுவிட்டு, நேராக நடந்து திருவொறறியூர் போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டார். அங்கு போனபோதே பாலாஜி தள்ளாடியபடியேதான் போய் இருக்கிறார். சோர்வாகவும், மயங்கியபடியும் வந்த பாலாஜியை போலீசார் என்ன, ஏதென்று விசாரித்தனர். அதற்கு பாலாஜி, "சார்.. நான் ஒரு பொண்ணை கத்தியால் கழுத்தை அறுத்திட்டேன்... நானும் எலிமருந்தை வாங்கி குடிச்சிட்டேன்" என்றார்.

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    இதையடுத்து, ஷாக் ஆன போலீசார் என்னாச்சு, என்று பதைபதைத்தபடியே கேட்டனர். "என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையாம், அதனாலதான் கழுத்தை அறுத்தேன்" என்று சொல்லியபடியே இளைஞர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக போலீசார் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நினைவு திரும்பவில்லை

    நினைவு திரும்பவில்லை

    தற்போது அவரது நிலைமை சுமாராக உள்ளது. ஆனால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிக்கு இன்னும் சுயநினைவு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே பாரதியின் தந்தை திருவொற்றியூர் போலீசில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். பாலாஜி பூரண குணமடைந்ததும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+