"நான் ராகு காலத்தில் திருமணம் செய்தேன்" சிங்கக் குட்டி போல 2 மகன்கள் இருக்காங்க.. அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: மாலை நேரத்தில் ராகு காலத்தில் தான் எனது திருமணம் நடைபெற்றது. எனக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததா என்ன? சிங்கக் குட்டி போல இரண்டு ஆண் குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள் என்று 20 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பிறகு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எ.வ.வேலு கூறியதாவது:- திருமண அழைப்பிதழில் சொல்லப்பட்டு இருந்தபடி காலை 8 மணிக்கு இந்த திருமணம் நடக்கவில்லை. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

அதன்பிறகு தான் இங்கே வந்துள்ளேன். காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் இந்த திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தினார். ஆனால் அப்படி திருமணம் நடைபெறவில்லை. அந்த வகையில் பார்த்தால் பெரியார், அண்ணா, கருணாநிதி நேசித்த பகுத்தறிவு திருமணம்; சுயமரியாதை திருமணம் மிக சரியாக நடந்துள்ளது. சுயமரியாதை, பகுத்தறிவு திருமணத்திற்கு கால நேரம் கிடையாது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணமக்களுக்கு நான் ஒரு தைரியத்தை சொல்லியாக வேண்டும். சரியான நேரத்தில் இன்றி கால தாமதம் ஆகி திருமணம் செய்கிறோம். எனவே, திருமண வீட்டினரின் அச்சத்தை போக்க நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் சுயமரியாதைக்காரன். நான் பகுத்தறிவு திருமணத்தை செய்து கொண்டேன். மாலை நேரத்தில் ராகு காலத்தில் தான் எனது திருமணம் நடைபெற்றது. எனக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததா என்ன? சிங்கக் குட்டி போல இரண்டு ஆண் குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள்.
ஒரு மகன் என்ஜினியரிங் படித்து விட்டு எங்களின் கல்வி நிறுவனங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். உழைக்கிற உழைப்புதான் மனித வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வருவதற்கான உந்து சக்தியாக இருக்கும். புறவாழ்க்கை குறித்து ஆண்கள் முடிவு எடுக்க வேண்டும். அக வாழ்க்கை எனப்படும் குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை பெண்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். பெண்கள் பேச்சை கேட்டால்தான் குடும்பம் நன்றாக இருக்கும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications