சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்ஐஆரில் என் பெயர் இல்லை.. சிபிஐ எதையும் கைப்பற்றவில்லை.. ரெய்டு பற்றி சிதம்பரம் ‛கெத்தான விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛சிபிஐ அதிகாரிகள் டெல்லி, சென்னையில் நடத்திய சோதனையில் எதையும் கைப்பற்றவில்லை. சோதனை தொடர்பான எப்ஐஆரில் என் பெயர் இடம்பெறவில்லை'' என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

    முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருப்பவர் ப சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக உள்ளார்.

    திண்டுக்கல்லில் இருதரப்பு மோதல்.. பெட்ரோல் குண்டு வீச்சு- 5 பேருக்கு வெட்டு.. படபாணியில் பயங்கரம் திண்டுக்கல்லில் இருதரப்பு மோதல்.. பெட்ரோல் குண்டு வீச்சு- 5 பேருக்கு வெட்டு.. படபாணியில் பயங்கரம்

    இந்நிலையில் இன்று காலையில் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர்

    7 இடங்களில் சோதனை

    7 இடங்களில் சோதனை

    இந்த சோதனையானது ப சிதம்பரத்துக்கு சொந்தமான டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான பல இடங்களிலும் சோதனைகள் துவங்கியது. எத்தனை இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது என்பது பற்றி சிபிஐ அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் மொத்தம் 7 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த வழக்கின் அடிப்படையில்...

    எந்த வழக்கின் அடிப்படையில்...

    கார்த்தி சிதம்பரம் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எதனடிப்படையில் சோதனை நடக்கிறது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 2010-14 காலக்கட்டத்தில் பஞ்சாபில் மின் திட்டம் ஒன்றில் சீனர்களை பணியமர்த்தும் வகையில் அவர்களுக்கு விசா கிடைக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் தான் த ற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

    ப சிதம்பரம் விளக்கம்

    ப சிதம்பரம் விளக்கம்

    இந்நிலையில் தான் ரெய்டு குறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், ‛‛இன்று காலை சிபிஐ குழு சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அலுவலக இல்லத்தில் சோதனை மேற்கொண்டது. சோதனை தொடர்பாக காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்(எப்ஐஆர்) குற்றவாளியாக என் பெயர் இடம்பெறவில்லை. சோதனை குழு வீட்டில் இருந்து எதையும் கண்டுபிடிக்கவில்லை. கைப்பற்றவும் இல்லை. இந்த சோதனையின் நேரமானது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் '' என தெரிவித்துள்ளார்.

     விமர்சனம்

    விமர்சனம்

    இதற்கிடையே இன்னும் சில இடங்களில் ரெய்டு தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் ரெய்டு தொடர்பாக சிபிஐ மற்றும் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ரெய்டு மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும் தற்போது ப சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவையும் சுட்டிகாட்டி சிபிஐ, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    English summary
    ‛‛CBI Team searched my residence at Chennai and my official residence at Delhi. The team showe me a FIR in which i am not named as an accused. The search team found nothing and seized nothing’’ says, p chidambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X