தேவநாத யாதவ் ரூ.450 கோடி பதுக்கியுள்ளார்.. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி
சென்னை: மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி லிமிடெட் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று சென்னையில் பேட்டி அளிக்கையில், கிட்டத்தட்ட 6 ஆயிரம் நபர்கள் இதில் பணத்தைக் கட்டி இழந்துள்ளோம், ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 145 நபர்கள் தான் வைப்பு நிதி வைத்துள்ளார்கள் என்று அவர் முறையிடுகிறார். 450 கோடி ரூபாய் எங்களுடைய வைப்பு நிதி எடுத்து தங்களுடைய குடும்பத்தினருக்கு அவர் சொத்து சேர்த்து வைத்துள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கு விசாரணை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி லிமிடெட் மோசடி சம்பந்தமாக மயிலாப்பூர் நிதி பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் சார்பாக பேசிய சங்கத்தின் தலைவர் மோகன் பேசுகையில், "151 ஆண்டுகள் பழமையான நிதி நிறுவனம் தான் மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்டு நிதி லிமிடெட் நிறுவனம் ஆகும், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதில் நாங்கள் இணைந்ததாக சில நபர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு நாங்கள் எங்களுடைய மறுப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது முதலில் நம்பகத்தன்மையான நிறுவனமாகத் தான் இருந்தது. 2016 வரை அது ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தது. 2016 பிறகு சுமார் 440 கோடி ரூபாய் அளவில் மோசடிகளை தேவநாத யாதவ் செய்துள்ளார். இதில் வைப்பு வைத்துள்ளார்கள் பெரும்பாலானோர் 60 வயதை கடந்தவர்கள், வயதான பிறகு தங்களுடைய பிள்ளைகளுக்கு தொந்தரவு அளிக்காமல் இருக்க இதில் பணம் செலுத்தி அதில் வரும் வட்டியை வைத்து வாழலாம் என்று எண்ணி தான் இதில் இணைந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இதுவரை வட்டியும் வரவில்லை அசலும் வரவில்லை.
பொருளாதார குற்றப்பத்திரிக்கை போலீசார் 4000லிருந்து 5000 வரை குற்றப்பத்திரிகைகளை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தேவநாதயாதவ் உச்ச நீதிமன்றத்தில் சென்று தப்பித்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார். எனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
450 கோடி முதல் 500 கோடி வரை தேவநாத யாதவ் இதில் பதுக்கி உள்ளார், இதில் வைப்பு நிதி வைத்து உள்ளவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தான், இதில் பத்து பேர் இறந்துள்ளார்கள், எங்கள் பணம் எப்போது எங்களுக்கு வரும் என்று தெரியவில்லை. விரைவு நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கை விசாரித்து தக்க நீதி வழங்க வேண்டும், உடனடியாக பணத்தை மீட்டு தர வேண்டும்.
தேவநாத யாதவ் நீதிமன்ற வாயிலில் அவருடைய வழக்கறிஞர்கள் உடனடியாக 100 கோடியை விடுவிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறி தான் வெளியே வந்தார், ஆனால் இன்னும் பணத்தை தரவில்லை. கிட்டத்தட்ட 6 ஆயிரம் நபர்கள் இதில் பணத்தைக் கட்டி இழந்துள்ளோம், ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 145 நபர்கள் தான் வைப்பு நிதி வைத்துள்ளார்கள் என்று அவர் முறையிடுகிறார்.
2016 ஆம் ஆண்டிலிருந்து எங்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று இதில் தெளிவாக செய்திருக்கிறார்கள். 450 கோடி ரூபாய் எங்களுடைய வைப்பு நிதி எடுத்து தங்களுடைய குடும்பத்தினருக்கு அவர் சொத்து சேர்த்து வைத்துள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கு விசாரணை தொடங்க வேண்டும்,
அவர் கொடுத்த காசோலை ஆறு கோடி ரூபாய் திரும்பவும் ரிட்டன் ஆகியுள்ளது. தேர்தல் நேரம் அப்படித்தான் ஆகும் என எங்களை ஏமாற்றினார். அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக என்னை உள்ளே வைத்துள்ளார்கள் என்று அவர் கூறுகிறார் ஆனால் அது அப்படி கிடையாது. இது போன்ற ஒரு பிம்பத்தை அவர் ஏற்படுத்துகிறார். புகார் தாரர்கள் 5000 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் அனைவரையும் இணைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விரைவு நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தின் தரவுகளை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications