மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் திருமண மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இணை ஆணையரின் கார் ஓட்டுநர், அந்த கோயில் திருமண மண்டபத்தில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் காவேரி. இவருக்கு கார் ஓட்டுநராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் வி.என். நகரில் உள்ளது. அங்கு நேற்று இரவு ஜெயச்சந்திரன் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார்.

சக ஊழியர்கள்
அப்போது அங்கு அருகே இருந்த சக ஊழியர்கள் மற்றும் ஜெயச்சந்திரன் மனைவியும் சேர்ந்து ஜெயச்சந்திரனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை
இதனை தொடர்ந்து அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இதன் பிறகு மயிலாப்பூர் போலீசார் தற்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ஜெயச்சந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

மன அழுத்தம்
இதனால் அவர் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. நேற்றும் வழக்கம் போல் இணை ஆணையர் காவேரிக்கு கார் ஓட்டிவிட்டு வந்துள்ளார். இவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video

தற்கொலை கடிதம்
சம்பவ இடத்தில் ஜெயச்சந்திரனின் தற்கொலைக்கான கடிதம் ஏதேனும் இருக்கிறதா என போலீஸார் சோதனை செய்தனர். ஆனால் அது போல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது செல்போனை ஆய்வு செய்து வருகிறார்கள். மனைவி, அவருடன் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல்












Click it and Unblock the Notifications