மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா : 25ல் தேரோட்டம் - 26ல் அறுபத்து மூவர் விழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25ஆம் தேதியும் அறுபத்து மூவர் விழா 26ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று போற்றப்படும் பெருமைக்கு உரியது மயிலாப்பூர். இங்கு ஏராளமான சிவ ஆலயங்கள் உள்ளன. மாதந்தோறும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் மயிலாப்பூர். மயிலை நகரத்திற்கு சிகரம் வைத்தாற்போல் இருக்கும் சிவ ஆலயம் கபாலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முன்தினம் கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்றது. கோலவிழியம்மன்கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து வரிசை எடுத்து வரப்பட்டது.பின், கோலவிழியம்மனுக்கு பொங்கல்வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கபாலீஸ்வரர் கோவில் சார்பில் பங்குனி பெருவிழாவிற்கான பத்திரிகை, கோலவிழியம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

கபாலீஸ்வரர் கற்பகாம்பாள்
அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான்.

பங்குனிப்பெருவிழா
இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலை மாடவீதிகளில் தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 25ஆம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருள்வார். காலை 8.45 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் நடைபெறும்.

63 நாயன்மார்கள்
26ஆம் தேதி காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை, வெள்ளி விமானத்தில் இறைவன், அறுப்பத்து மூன்று நாயன்மார்களுடன் திரு காட்சி அருளும் அறுபத்து மூவர் திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.

பங்குனி உத்திர திருக்கல்யாணம்
28ஆம் தேதி புன்னை மரத்தடியில் சிவ வழிபாடு நடக்கிறது. அன்று மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 29ஆம் தேதி பந்தம் பறி விழாவும் நடைபெற உள்ளன. 30ஆம் தேதி விழா நிறைவு திருமுழுக்கு நடைபெறுகிறது.

சாமி வீதி உலா
பங்குனி பெருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வெள்ளி மூஷிக வாகனம், நாகம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாமி தரிசனம்
கொரோனா காலமாக இருப்பதால் கடந்த ஆண்டு திருவிழா ரத்து செய்ப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பக்தர்கள் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை http://www.youtube. com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE என்ற யூடியூப் சேனலில் பாதுகாப்பாக பார்க்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications