தினமும் திருவல்லிக்கேணியில் இப்படித்தான் நடக்குதா? பல்சர் பைக்கில் வர்றாங்களாம்.. ஆடிப்போன சென்னை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நள்ளிரவு நேரங்களில் பல்சர் பைக்கில் வரும் ஒரு கும்பல் தெருத் தெருவாக சுற்றி, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடி செல்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகள் முழுமையாக மிகவும் நெருக்கடியான சாலைகள் மிகுந்த பகுதிகள் ஆகும். பல சாலைகளில் கார்களோ, லாரிகளோ போக முடியாது. சில சாலைகளில் ஆட்டோவில் மட்டுமே செல்ல முடியும் , சில பாதைகளில் இருசக்கர வாகனங்கள் தான் செல்ல முடியும்.

சென்னையின் மற்ற பகுதிகளில் எல்லாம் கார் பார்க்கிங் உடன் வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் பைக் பார்க்கிங் வசதியுடனாவது வீடுகள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருவல்லிக்கேணி பகுதிகளில் கட்டப்படும் புதிய வீடுகளில் மட்டும் பைக் பார்க்கிங், கார் பார்க்கிங் வைத்து வீடுகள் கட்டப்படுகிறது. பழைய வீடுகளிலும், சில சாலைகளிலும் இதற்கான வசதிகள் இல்லை.
இதனால் சிட்டி சென்டர் முதல் அப்படியே சேப்பாக்கம் வரை உள்ள திருவல்லிக்கேணி பகுதிகளில் பல ஏரியாக்களில் இரு சக்கர வாகனங்கள் வீடுகளை ஒட்டியுள்ள சாலைகளில் தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து பகுகளிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால் வாகனங்களை திருடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி யாராவது வாகனங்களை திருடினால் திருவல்லிக்கேணியை தாண்டுவதற்குள் சிக்கி கொள்வார்கள்.
இந்த சூழலில் சென்னை திருவல்லிக்கேணி பகுதிளில் நூதனமாக திருட்டு நடந்து வந்துள்ளது. தினமும் சிலர் பைக்குகளில் வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடி உள்ளார்கள். தினமும் டேங்கில் புல்லாக இருக்கும் பெட்ரோல் காலையில் காணாமல் போவதை கண்ட வாகன ஓட்டிகள் ஒரு கட்டத்தில் சிசிடிவி கேமராக்களை சோதித்த போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. பல்சர் பைக்கில் வந்த கும்பல் பெட்ரோலை ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி திருடியது தெரியவந்தது.. இந்த சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications