கிண்டி, பரங்கிமலை, நங்கநல்லூர் பக்கம் வீடு இருக்கா.. சென்னை ஏர்போர்ட் முக்கிய கோரிக்கை
சென்னை: சென்னையில் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் தரையிறங்க வரும் விமானங்கள் மீது 'லேசர் ஒளி' பாய்ச்சப்படுகிறது. கண்களை நோக்கி பாயும் இந்த லேசர் ஓளியால் ஒரு சில வினாடிகள் விமானத்தை இயக்க முடியாமல் விமானிகள் திணறும் நிலை ஏற்படுகிறது.. விளையாட்டாக சிலர் செய்யும் இந்த செயல் பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பதால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்று. இங்கு நாள் தோறும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. அதேநேரம் தரையிறங்க விமானங்கள் காத்திருக்கும் அளவிற்கு மிகவும் மிகவும் பிஸியான விமான நிலையம் ஆகும். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல முடியும். அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து உலக நாடுகளுக்கு இயக்கப்படும் பல்வேறு விமானங்கள் இரவில் மற்றும் அதிகாலையில் தான் புறப்பட்டு செல்லும்.. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள் அதிகாலை மற்றும் இரவில் தான் வருகின்றன.

அப்படி சென்னையில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் தரை இறங்கும் விமானங்கள் மீது சில மர்ம நபர்கள் 'லேசர் ஒளி' அடிக்கிறார்கள். அப்படி லேசர் ஒளி அடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் விமானங்கள், தரை இறங்குவதற்காக ஓடுபாதையில் தாழ்வாக பறக்கும் போது விமானத்தை நோக்கி மர்ம நபர்கள் விளையாட்டுத்தனமாக 'லேசர் ஒளி' அடிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த 'லேசர் ஒளி' சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என மாறுபட்ட நிறங்களில் வருவது உண்டு.
விமானங்கள் மீது லேசர் ஒளி அடிப்பது, விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். 'லேசர் ஒளி'யை விமானத்தின் மீது பாய்ச்சும்போது, அது விமானியின் கண்களை நோக்கி பாய்வதால் விமானி ஒரு சில வினாடிகள் விமானத்தை இயக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். அதேநேரம் விமானிகள் சமாளித்துக்கொண்டு விமானத்தை தரை இறக்கி வருகிறார்கள் . சில நேரங்களில் விமானிகள் விமானத்தை தரை இறக்காமல் உடனடியாக மீண்டும் வானில் பறக்கச் செய்துவிட்டு, அதன்பின்பு விமானத்தை தரை இறக்குவதும் நடக்கிறது.
நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தரை இறங்கும் விமானங்களை நோக்கிதான் இந்த 'லேசர் ஒளி' பாய்ச்சப்படுகிறது. இந்த லேசர் 'லேசர் ஒளி' பரங்கிமலை, நந்தம்பாக்கம், நங்கநல்லூர், பம்மல், பொழிச்சலூர், பழவந்தாங்கல், கிண்டி, சின்னமலை, கோட்டூர்புரம், மந்தைவெளி பகுதியில் இருந்து அடிக்கடி வருவதாக விமானிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் குறிப்பிட்ட விமானத்தின் விமானி அல்லது சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், விமான நிலைய காவல் நிலையங்களில் புகார் செய்கின்றனர். ஆனால் இவர்கள் தான் அடித்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருப்பது இல்லை என்பதால் ஒன்றும் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் 'லேசர் ஒளி' அடிப்பவர்கள் அடிக்கடி விளையாட்டாக செய்வது தொடர்கிறது. இப்படி லேசர் ஒளி அடிப்பது விமான பயணிகள், விமானிகள், விமான ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது.
இதுபற்றி 'ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "சென்னை விமான நிலையத்தின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சமுதாய பொது நலன் கருதி, இதுபோல் விமானங்கள் மீது 'லேசர் ஒளி' அடிப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது காவல் துறைக்கோ தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கொடிய செயல்களை செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று எச்சரித்துள்ளது..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications