"எமர்ஜென்சி! விஜய்யை பார்க்கணும்"! நீலாங்கரை வீட்டின் முன்பு மந்திரம் ஓதிய மர்ம மூதாட்டி! யார் இவர்?
சென்னை: சென்னை நீலாங்கரையில் விஜய் வீட்டு கேட்டின் முன்பு வெள்ளை உடை அணிந்த மூதாட்டி ஒருவர் விஜய்யை பார்த்தே ஆக வேண்டும், அவரிடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என மணிக்கணக்கில் காத்திருக்கிறார். அவ்வப்போது அமர்ந்து மந்திரங்களை ஜெபிக்கிறார். யார் இவர், எதற்காக விஜய்யை பார்க்க துடிக்கிறார் என்பதை பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்து வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

விஜய்யின் தவெக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என விஜய், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள். அடுத்து விஜய்தான் முதல்வர் என்றும் கூறுகிறார்கள்.
அது போல் நேற்றைய தினம் கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகின. அதில் ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் விஜய்க்கு 98 - 120 இடங்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மற்றவை ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கத்தில் வெல்ல வாய்ப்பு என்கிறார்கள். ஒரு சில கணிப்புகளில் விஜய் பெரம்பூர் தொகுதியில் மட்டும் வெல்வார் என்கிறார்கள்.
கருத்து கணிப்புகள் குறித்து நம்பிக்கையில்லாதவர்கள், வெறும் 40 ஆயிரம், 50 ஆயிரம் பேரிடம் கருத்துகளை கேட்டு அவர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என கேட்டு வெளியிட்டால் அது கணிப்பாகிவிடுமா, யதார்த்தம் என இருக்கிறது, மே 4 ஆம் தேதிதான் உண்மை தெரியும் என்கிறார்கள்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த கையோடு விஜய் திருச்செந்தூர் முருகன் கோயில், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டார். தேர்தலுக்கு முன்பு நாகூர் தர்காவுக்கும் அவர் செல்வார் என சொல்லப்படுகிறது.
இன்றைய தினம் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை சந்தித்து சில அறிவுரைகளை வழங்கினார். மேலும் தவெக வென்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தாராம். கருத்துக் கணிப்புகள் குறித்து விஜய் எந்த கருத்தையும் சொல்லவில்லை என மரிய வில்சன் (ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர்) தெரிவித்துள்ளார்.
நீலாங்கரை வீட்டு வாசலில் அவ்வப்போது ரசிகர்கள் குவிந்து விஜய் வெளியே வந்தால் அவர்களை பார்ப்பதுண்டு. இந்த சூழலில் வெள்ளை ஆடை அணிந்த ஒரு மூதாட்டி, பார்ப்பதற்கு ஆன்மீகவாதி போல் இருக்கிறார்.
அவர் வடலூரில் இருந்து வந்திருக்கிறார். விஜய்யை பார்த்தே ஆக வேண்டும் என அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். விஜய் வீட்டின் பிரம்மாண்ட கேட் அருகே உள்ள செக்யூரிட்டியிடம் அந்த கேட் இடுக்குகளில் பேசுகிறார்.
"விஜய்யிடம் சொல்லுங்கள், நான் அவரை பார்த்தே ஆக வேண்டும். அவரை பார்க்காமல் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். தேவையில்லாமல் விஜய்க்கு கெட்ட பெயரை நீங்கள் உண்டாகாதீர்கள். அவர் பார்க்க முற்பட்டாலும் நீங்கள் விட மாட்டீங்க போல. நான் அவரை பார்த்து ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். அவரிடம் இதை கொடுக்க வேண்டும்" என கையில் ஏதோ கடிதம் போல் வைத்திருக்கிறார். அது கோயில் பிரசாதமா இல்லை வேறு ஏதேனும் முக்கிய பொருளா என தெரியவில்லை.
இந்த மூதாட்டி அங்கு மணிக்கணக்கில் உணவில்லாமல் காத்திருப்பதாக சொல்கிறார். மேலும் வயதான தன்னை அலைக்கழிக்க வேண்டாம். விஜய்யிடம் போய் சொல்லுங்கள் என்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் விஜய்யை பார்த்தே ஆக வேண்டும். எமர்ஜென்சி, வடலூரில் இருந்து சென்னை வந்து 4 பேருந்துகள் மாறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
அவரிடம் நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும். உங்களிடம் சொல்ல முடியாது, அவரை பார்க்கவிடாவிட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பேன். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் விஜய்யும் ஏழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும். ஏழைகளுக்கு செய்வது இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்" என தெரிவித்தார்.
-
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி












Click it and Unblock the Notifications