பொன்முடியை அமைச்சராக்க மறுப்பு.. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக எம்பி வில்சன் பரபரப்பு பதிவு
சென்னை: பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்திருப்பதற்கு திமுக எம்பியும் வழக்கறிஞருமான வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக மாநிலங்களை எம்பி வில்சன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: "தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்பவர் என்பதை நிரூபித்து வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறார்.

9.12.2023 அன்று, அப்போதைய அமைச்சர் பொன்முடி, சென்னை உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் 11.03.2024 அன்று நிறுத்தி வைத்தது. தண்டனையை இடைநிறுத்தும்போது, உச்ச நீதிமன்றம் குறிப்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை வகித்ததற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவரது தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, 19.12.2023 முதல் பொன்முடி தகுதி நீக்கம் நிறுத்தப்பட்டதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கடந்த 13.03.2024 அன்று அறிவித்தார். மேலும், 16.03.2024 அன்று, தேர்தல் அறிவிப்பை வெளியிடும் போது, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் எண்.76ஐ காலியிடத்திற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. எனவே, அனைத்து அரசியலமைப்பு அதிகாரிகளும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முறையாகக் கடைப்பிடித்துள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பொன்முடியின் தண்டனை இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக ஆளுருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து அவருக்கு உயர்கல்வி இலாகா ஒதுக்குமாறு ஆளுநருக்கு 13.03.2024 அன்று கடிதம் எழுதினார்.
ஆனால் இவை அனைத்தையும் மீறிய ஆளுநர் ரவி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளார். அதில், "தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ளது, ரத்து செய்யப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு அபத்தமான விளக்கம். இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142 & 144 இன் கீழ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். மேலும்,முதலமைச்சரின் உத்தரவை ஏற்க அவர் அப்பட்டமாக மறுத்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடியை நியமிக்க மறுப்பது என்பது, சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து, அரசியல் சாசனத்தின் 164(1) பிரிவை மீறுவதாகும். தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்துள்ள நிலையில் ஆளுநரின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும்.
உயர் நீதிமன்றத்தின் தண்டனை உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் " இடைநீக்கம்" செய்யப்பட்டால், அந்த உத்தரவு சட்டத்தின் பார்வையில் இல்லை என்று அர்த்தம். தார்மீக அடிப்படையிலோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை ஆளுநரால் தீர்மானிக்க முடியாது என்பது ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது. யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அந்த உரிமை முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு. அமைச்சராக நியமிக்கப்படுபவரின் தகுதி குறித்த முதல்வரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வி கேட்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது..

ஆளுநர் அரசுடன் மோதலில் ஈடுபவது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயம் அல்ல.. ஏனெனில் ஆளுநர் ரவி தமிழக பாஜக பிரிவின் தற்போதைய தலைவராக செயல்படுகிறார் . அத்துடன் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் திறனைக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது தற்போதைய நடவடிக்கையால் அவர் மொத்த அரசியலமைப்பையும் மீறுகிறார். நீதிமன்றத்தை அவமதிப்பு செய்கிறார். தமிழக சட்டசபையான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பா.ஜ.கவால் காலூன்ற முடியாது என்பதால் ராஜ்பவனில் இருந்து இணையான ஆட்சியை நடத்த முயற்சிக்கிறார்.
அரசியல் சாசனம், சட்டங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மீது அக்கறை இல்லாத இந்த ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரை நான் வலியுறுத்துகிறேன். ராஜ்பவனையே அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவரை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே மீறுவது, அரசியல் சாசன விதிகளை இழிவுபடுத்துவது, சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டால், ஆளுநர் ரவி இனி அந்தப் பதவியில் இருக்கத் தகுதியற்றவர்." இவ்வாறு வில்சன் எம்பி தனது பதிவில் கூறியுள்ளார்
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications