ஆல் இன் ஆல் அழகுராஜா.. கட்சி பணத்தை வட்டிக்கு விட்ட சீமான்! புகார்களை அடுக்கும் மாஜி நிர்வாகிகள்!
சென்னை : நாம் தமிழர் கட்சி அலுவலகம் ஆயிரக்கணக்கான நபர்களின் உழைப்பில் வந்தது, அதை தனி நபரின் பெயரில் பத்திரம் செய்துள்ளனர் எனவும், கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்தோம். அதற்கு உரிய மதிப்பில்லை என அக்கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகியான பிரபு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் ஆடியோ அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டு கேட்பதாகவும், அவற்றை பொதுவெளியில் வெளியிடுவதாகவும் நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒழுங்கினைப்பாளரான சீமான் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான காளியம்மாள், கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் குறித்து பேசிய ஆடியோ வெளியானது.
சீமானா இப்படி பேசுகிறார் என விமர்சனங்களும் எழுந்தது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கைது செய்த போது அவரது மொபைலில் இருந்த ஆடியோ வீடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினர் எடுத்து வைத்துக்கொண்டு லீக் செய்ததாகவும் கூறப்பட்டது. மற்றொருபுறம் அது சீமான் பேசியது அல்ல என சிலர் கூறினாலும் இந்த விவகாரம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மற்றொருபுறம் அது சீமான் பேசியது அல்ல என சிலர் கூறினாலும் இந்த விவகாரம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே அதிமுகவுக்கு சென்ற கல்யாணசுந்தரத்திடம் காளியம்மாளும், திமுகவுக்குச் சென்ற ராஜீவ் காந்தியிடம் நத்தம் சிவசங்கரும் பேசி வருவதாகவும், இருவரும் விரைவில் அவர்கள் அந்த கட்சிகளில் இணைவார்கள் என கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க கட்சியில் சீமான் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் முக்கிய நிர்வாகிகளை சீமான் மதிக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே நிர்வாகிகள், தொண்டர் என பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி இருக்கின்றனர். இது மட்டும் அல்லாமல் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் என கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் சீமான் நீக்கிதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து பல நிர்வாகிகள் தூக்கி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் திருச்சி மண்டல செயலாளர் பிரபு, தெற்கு மாவட்ட செயலாளர் முருகன், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சீமான் மீது பலத்த குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரபு,"சீமான் சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். அவரது பேச்சும் செயலும் வேறு வேறாக இருக்கிறது. தமிழ் தேசிய உணவாளர்களின் உழைப்பை சுரண்டி சீமான் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். திரள்நிதி மூலம் கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொடுத்த பணத்தை சீமான் வட்டிக்கு விட்டார். அந்த பணத்தை வாங்கியவர் அதனை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்து தலைமறைவாகிவிட்டார்.
கட்சிக்கு செயற்குழு, பொதுக்குழு, தனி சட்டம் என எதுவும் கிடையாது. ஒன் மேன் ஆர்மியாக செயல்படுகிறார் . கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் பிரபலமாக கூடாது என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்தோம். அதற்கு உரிய மதிப்பில்லை.
எதற்கெடுத்தாலும் என் கட்சி, என் கட்சி என சீமான் பேசுகிறார். சீமான் மட்டுமே நாம் தமிழர் கட்சியை வளர்த்தாரா? ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் எங்கே போவது? தமிழ்தேசியம், தலைவர் பிரபாகரனை நேசித்து இந்த கட்சிக்கு வந்தோம். தற்போது, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகம் சரியில்லை. கட்சி அலுவலகம் ஆயிரக்கணக்கான நபர்களின் உழைப்பில் வந்தது. அதை தனி நபரின் பெயரில் பத்திரம் செய்துள்ளனர்." என்றார்.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications