தாத்தா வயசு அவருக்கு.. திமுக நிர்வாகியை திருப்பி தாக்காதது ஏன்? நாதக ஹிம்லர் பரபர விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேடையில் தன்னை அடிக்க பாய்ந்த திமுக நிர்வாகியை எதிர்கொள்ளாமல் பின்பக்கம் விலகி சென்றது ஏன் என்று நாம் தமிழர் நிர்வாகி ஹிம்லர் விளக்கம் அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சிக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் கடந்த சில நாட்களாகவே அரசியல் ரீதியான மோதல் தீவிரம் அடைந்து வருகிறது. சாட்டை துரைமுருகன் போன்ற நாம் தமிழர் நிர்வாகிகள் கைதால் இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில்தான் தருமபுரியில் நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் திமுகவினர் சிலர் மோதலில் ஈடுபட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர்

நாம் தமிழர்

தருமபுரி மாவட்டம் மொராப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில்தான் அந்த மோதல் ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார். அரசுக்கு எதிராக இவர் கருத்துக்களை வைத்து வந்தார். அப்போது முதல்வர் குறித்து இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

 அவதூறு

அவதூறு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிம்லர் முதல்வரை பற்றி அவதூறாக சில கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது.

மோதல்

மோதல்

அந்த கூட்டத்தில் கீழே இருந்த திமுக நிர்வாகிகள் இதை பார்த்து கொதித்து போனார்கள் இதையடுத்து அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் சிலர் உடனே மேடை மீது ஏறி மோதலில் ஈடுபட்டனர். அதில் ஒரு நிர்வாகி ஹிம்லரை அடிக்க பாய்ந்தார். ஆனால் ஹிம்லர் அப்படியே பின்பக்கம் ஒதுங்கினார்.

மரியாதை முக்கியம்

மரியாதை முக்கியம்

அங்கிருந்த மைக் கீழே வீசப்பட்டது. மேடையில் பேசிக்கொண்டு இருந்த ஹிம்லர் பின்பக்கம் சென்று ஒதுங்கினார்.ஏன் மரியாதையா பேச தெரியாதா உனக்கு.. மரியாதையா பேசு என்று கூறி திமுக நிர்வாகிகள் மோதலில் ஈடுப்பட்டனர். கீழே இருந்த நிர்வாகிகள் சிலர் மேடை மீது நாற்காலியை தூக்கி வீசினார்கள்.

பரபரப்பு

பரபரப்பு

இந்த சம்பவம் காரணமாக இரண்டு தரப்பிற்கும் இணையத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக நிர்வாகியை பார்த்து ஹிம்லர் பயந்துவிட்டதாக சில திமுகவினர் இணையத்தில் கமென்ட் செய்து வந்தனர். வீரமாக பேசிவிட்டு.. ஒரு திமுக நிர்வாகியை கண்டதும் ஒதுங்கிவிட்டார் என்று அவரை கிண்டல் செய்யும் விதமாக கமென்ட் செய்து வந்தனர்.

விளக்கம்

இதற்கு ஹிம்லர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். ஹிம்லர் வெளியிட்டுள்ள வீடியோவில், உங்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவரை ஏன் தாக்கவில்லை என்று கேட்கிறார்கள். அவர் தாத்தா வயதில் இருக்கிறார். என்னுடைய தாத்தா வயதில் இருப்பவரை நான் எப்படி அடிக்க முடியும்.

Recommended Video

    தருமபுரி: பேச்சை நிறுத்துடா.. கொந்தளித்த திமுகவினர்… நாம் தமிழர் கட்சி மேடையில் பறந்த சேர்கள்!
     தாத்தா வயது

    தாத்தா வயது

    தாத்தா வயதில் இருக்க கூடியவரை தாக்க கூடிய மனநோயாளி நான் அல்ல. அந்த அளவிற்கு தரம் கெட்டவன் நான் அல்ல. அவர் வேண்டுமானால் பேரன் வயதில் உள்ளவரை அடிக்கும் அளவிற்கு நிதானம் இழந்து தெளிவு இல்லாமல் இருக்கலாம். அவர் தெளிவு இல்லாமல் இதை செய்தார் என்பதற்காக நாமும் இதை செய்ய முடியாது. பின் அவருக்கும் நமக்கும் என்ன வேறுபாடு. நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது., என்று ஹிம்லர் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+