மாநிலம் விட்டு மாநிலம்..கடும் மன உளைச்சல் ஆகுது! ’இதற்கு’ இப்படி திட்டமா? பொங்கிய நாம் தமிழர் சீமான்
சென்னை: முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அவரவர் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் எனவும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே தகுதியான மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினை எழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் இந்திய தேர்வு முகமையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

இது முழுக்க முழுக்க, தமிழ்நாட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மருத்துவப் படிப்பினை கைவிடச் செய்யும் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏறத்தாழ 2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேர்வு முகவை நடத்தும் 2024-25ஆம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவத்திற்கான இத்தேர்வானது கடந்த சூன் மாதம் 23 ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அத்தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஏற்கனவே 259 தேர்வு மையங்களாக இருந்ததைத் தற்போது 185 தேர்வு மையங்களாக தேசிய தேர்வு முகமை குறைத்துள்ளது.
இதனால் அவரவர் மாநிலங்களில் விருப்பத் தேர்வு மையங்களைக் கோரியிருந்த தேர்வர்கள் பலருக்கும் 500 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரையிலான தொலைவில் தேர்வு மையங்களை இந்திய தேர்வு முகமை ஒதுக்கியுள்ளதால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்
குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் பலருக்கும் இங்குள்ள தேர்வு மையங்களில் ஒதுக்காமல், பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தேர்வு மையங்களைத் தேர்வு முகமை ஒதுக்கியுள்ளது. தேர்வு மையங்கள் நெடுந்தொலைவில் ஒதுக்கப்பட்டு இருப்பதால், பயணச் செலவு மற்றும் அலைச்சல் அதிகரித்துள்ளதால், தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
வேறு மாநிலத்தின் இரண்டாம்நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினைக் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. இதற்காக அவ்விடங்களுக்குச் சென்றுசேர இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தேர்வர்கள் புறப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டுத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தவும், உளவியலாகச் சிதைத்துத் தோல்வியுறச் செய்யவுமே வழிவகுக்கும். தமிழ்நாட்டுத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்கான மற்றுமொரு சூழ்ச்சியாகும்.
இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்? முறைகேடாகத் தேர்வு நடைபெறும் வட மாநிலங்களில் அதிகத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்போது, அப்படியான எந்தப் புகாரும் எழாத நிலையில் தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்கத் தேர்வு முகமை தவறியது ஏன்? ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களைக் குறைத்தது ஏன்? இளநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தற்போது முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினையும் இத்தனை குளறுபடிகளுடன் நடத்துவது இதிலும் முறைகேடுகள் செய்வதற்கான நடவடிக்கையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் தகுதியான மருத்துவர்களை உருவாக்குவதற்கான தேர்வு என்ற பெயரில் தொடர்ச்சியாகத் தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு பயன்படுத்தப்படுகிறது என்பது நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே தகுதியான மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.
ஆகவே, மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் உறுதியான கோரிக்கையாக இருந்தபோதிலும், தற்போதைக்கு முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினை தமிழ்நாட்டுத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றித்தர வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications