தமிழகம் முழுக்க.. மண்டல வேறுபாடு இல்லாமல்.. நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வளர்ச்சி.. தந்தி டிவி சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கிறது தந்தி டிவி.
Recommended Video
மார்ச் 5ம் தேதி முதல், 28ம் தேதி வரை தமிழகம் முழுக்க எடுக்கப்பட்ட எலக்சன் தொடர்பான சர்வே முடிவுகளை தந்தி டிவி நேற்று வெளியிட்டது.
முதல் கட்டமாக 50 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
34 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்றும், 12 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும் என்றும் அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி களிடையே நல்ல போட்டி இருக்கக் கூடிய அளவுக்கு இரு கூட்டணிகளும் ஓட்டு சதவீதம் இருப்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளது தந்தி டிவி கருத்துக்கணிப்பு.

மூன்றாவது இடம்
அது ஒருபக்கம் என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் மூன்றாவது இடம் , நான்காவது இடம், ஐந்தாவது இடம் யாருக்கு என்பது பற்றியும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டதில் கணிசமான தொகுதிகளில் மூன்றாவது இடம் பிடிக்கப் போவது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி.

அடடே தஞ்சை
உதாரணத்திற்கு, திமுக, அதிமுக, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை வாக்கு வங்கியைப் பராமரித்து வரக்கூடிய தொகுதி தஞ்சாவூர். தந்திடிவி கருத்துக்கணிப்பின்படி இங்கு,44% - 50% வாக்குகளை பெற்று திமுக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக38% - 44% வாக்குகளை பெறும், அதே நேரம் நாம் தமிழர் கட்சி 5% - 8% வாக்குகளைப் பெறும். அதாவது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் உள்ள தேமுதிக இங்க போட்டியிடுகிறது அந்த கட்சி. 3% - 6% வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை தான் படிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள்
இதைப்போல பூம்புகார் தொகுதியில் நாம் தமிழர் மூன்றாவது இடம் , மக்கள் நீதி மய்யம் கூட்டணி நான்காவது இடம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஐந்தாவது இடம் பெறக் கூடும் என்கிறது தந்தி டிவி கருத்துக்கணிப்பு . திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெல்லக் கூடும் என்றும் அதேநேரம் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி நான்காவது இடம் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கே எப்படி
அப்படியே தெற்கே வந்தால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் 47 சதவீத வாக்குகளை பெற்று வெல்ல கூடும் என்றும், நாம் தமிழர் அதிகபட்சம் 7 சதவீதம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும் இந்த தொகுதியில் ஏறத்தாழ அதே வாக்குகளைப் பெறுகிறது. செஞ்சி தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தொகுதி , ஆம்பூர் தொகுதி, நிலக்கோட்டை தொகுதி உள்ளிட்டவற்றில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜாதி, மதம் அப்பாற்பட்ட ஓட்டுக்கள்
உதாரணத்துக்கு, அறந்தாங்கி தொகுதி நிலவரத்தை பாருங்கள். காங். 42% - 48% வாக்குகளைப் பெற்று வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுக 40% - 46% வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்கிறது இந்த கணிப்பு. அமமுக 6% - 9%, நாம் தமிழர் 3% - 6%, தமஜக(மநீம+) 1% - 4% வாக்குகளை பெறக்கூடும் என்று தெரிகிறது இந்த கருத்துக் கணிப்பு. தினகரன் கட்சி வலிமையாக இருக்கக்கூடிய சில மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்று. முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. இருப்பினும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு நெருக்கமான இடத்தில் நான்காவது இடம் வந்துள்ளது நாம் தமிழர். இதன் மூல,ம் ஜாதி, மதம் உள்ளிட்ட எந்த வேறுபாடுகளையும் தாண்டி அனைத்து பிராந்தியங்களிலும் நாம் தமிழர் கட்சி நிலையான வளர்ச்சி பெற்றிருப்பது கொள்வது தந்திடிவி கருத்துக்கணிப்பின் மூலம் உறுதியாக தெரிகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications