"மரியாதையா பேசு".. தீவிரம் அடையும் திமுக vs நாதக மோதல்.. இணையத்தில் சரமாரி சண்டை.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி டேக்ஸ் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

Recommended Video

    தருமபுரி: பேச்சை நிறுத்துடா.. கொந்தளித்த திமுகவினர்… நாம் தமிழர் கட்சி மேடையில் பறந்த சேர்கள்!

    நாம் தமிழர் கட்சிக்கும் ஆளும் திமுகவிற்கும் சமீப நாட்களாக கருத்து மோதல் மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. அதிலும் நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து முதல்வரையும், அவரின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

    முதல்வரை தொடர்ந்து அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் சிறையில் இருக்கிறார். நாம் தமிழர் கூட்டத்தில் முதல்வரை இவர் அவதூறாக பேசியதாக வழக்கு ஒன்றும் உள்ளது.

    புகார்

    புகார்

    இந்த நிலையில்தான் நேற்று தருமபுரி மாவட்டம் மொராப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார்.

    என்ன பேசினார்?

    என்ன பேசினார்?

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிம்லர் முதல்வரை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் சிலர் உடனே மேடை மீது ஏறி மோதலில் ஈடுப்பட்டனர். ஏன் மரியாதையா பேச தெரியாதா உனக்கு.. மரியாதையா பேசு என்று கூறி திமுக நிர்வாகிகள் சிலர் மோதலில் ஈடுப்பட்டனர். இது இரண்டு தரப்பிற்கும் இடையில் மோதலில் முடிந்தது. கீழே இருந்த நிர்வாகிகள் சிலர் மேடை மீது நாற்காலியை தூக்கி வீசினார்கள்.

    நாற்காலி

    நாற்காலி

    அங்கிருந்த மைக் கீழே வீசப்பட்டது. மேடையில் பேசிக்கொண்டு இருந்த ஹிம்லர் பின்பக்கம் சென்று ஒதுங்கினார். இந்த நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மொராப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் திமுக கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி டேக்ஸ் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகிறது.

    டேக்ஸ்

    டேக்ஸ்

    இரண்டு தரப்பும் புதிய டேக்ஸ்களை உருவாக்கி மோதலில் ஈடுப்பட்டு வருகின்றன. திமுக தரப்பு சார்பாக நாம் தமிழர் கட்சியை விமர்சனம் செய்யும் வகையில் ஒரு டேக் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இனி இருக்காது. அவர்களின் கூடாரம் காலியாகிவிடும் என்று பொருள்படும் வகையில் டேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் திமுகவை விமர்சனம் செய்யும் வகையில் கடுமையான அர்த்தம் கொண்ட டேக் ஒன்றை நாம் தமிழர் உருவாக்கி உள்ளனர்.

    டிரெண்ட்

    டிரெண்ட்

    இரண்டு டேக்கில் மாறி மாறி இரண்டு கட்சியினரும் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் இணையத்தில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் பேசிய சில சர்ச்சைக்குரிய வீடியோக்களை திமுகவினர் ஒரு பக்கம் பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் திமுகவினர் மீதான புகார்கள், வழக்குகள் என பலவற்றை நாம் தமிழர் கட்சியினர் போஸ்ட் செய்து வருகின்றன.

    விரிசல்

    விரிசல்

    இரண்டு தரப்புக்கும் இடையிலான இந்த மோதல் காரணமாக ட்விட்டர் அரசியல் களம் இப்போது பரபரப்பாக காணப்படுகிறது. முக்கியமாக இரண்டு கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களால் மோசமான வார்த்தைகளால் மாறி மாறி திட்டிக்கொள்வதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+