நடிகர் விஜய் எதுக்கு பெரியார் திடல் போனாரு தெரியுமா?கண்டுபிடித்த சீமான் கட்சி இடும்பாவனம் கார்த்திக்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தந்தை பெரியார் பிறந்த நாளில் பெரியார் திடலுக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்ததன் பின்னணி குறித்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் சுவாரசிய தகவலைப் பகிர்ந்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பெரியார் ஒரு அறிவிக்கப்படாத மதமாக உருவாக்கப்படுவதாகவும் இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் தமது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பகிர்ந்திருந்தார். அத்துடன் திடீரென சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் முதல் முறையாக தலைவர் ஒருவரது சிலைக்கு மாலை அணிவித்தது தந்தை பெரியாருக்குதான். இதனால் நடிகர் விஜய்யை பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தொடர்பாக நீண்ட சொற்பொழிவையே கடும் கோபத்துடன் நிகழ்த்தினார்.
இதேபோல டிவி விவாதம் ஒன்றில் நடிகர் விஜய், பெரியார் திடலுக்கு சென்றது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் கூறிய சுவாரசிய தகவல்கள்: விஜய் மாலை அணிவித்திருப்பதாலேயே பெரியார் கோட்பாடுகளை நடிகர் விஜய் பின்பற்றுகிறார் என சொல்ல முடியாது. ஏனெனில் பெரியார் சிலைக்கு தமிழ்நாட்டில் மாலை போடாத தலைவர்களே இல்லை. ஏன் தேசியம், திராவிடத்தை ஒன்றாக கட்சிப் பெயரில் வைத்த விஜயகாந்தும் மாலை போட்டார்தானே. பெரியார் சமூக நீதிக்காக போராடியவர் என பாஜக தலைவராக இருந்த போது எல்.முருகனும் கூறினார்.
இந்துவாகவே சாகமாட்டேன் என்ற அம்பேத்கரை இப்போது சங் பரிவார இயக்கங்கள் கொண்டாடுகின்றன. காமராஜரை உயிரோடு கொளுத்தப் பார்த்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக இன்று காமராஜரை கொண்டாடுகின்றன. ஆகையால் இவை எல்லாம் ஒரு அடையாள அரசியல்.. பிம்ப அரசியல் அவ்வளவுதான்.
நாம் தமிழர் கட்சி பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறது. மொழி, இன தொடர்பான பெரியாரின் வரையறைகளில் முரண்படுகிறது. ஆதி முதல் அந்தம் வரை பெரியாருக்குள் அடக்கம்.. எல்லாமே பெரியாரில் இருந்துதான் தொடக்கம் என்பதை நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் திமுகவை யார் விமர்சித்தாலும் சங்கி முத்திரை குத்துகின்றனர். நடிகர் விஜய் மீதும் சங்கி முத்திரை குத்தப்படுகிறது. இந்த சங்கி முத்திரையை தவிர்க்கத்தான் விஜய் பெரியார் திடலுக்குப் போனார். பா.ரஞ்சித்தை திராவிட கூட்டம் சங்கி என்றுதானே விமர்சித்தது. சங்கி என்ற விமர்சனத்துக்கு பதில் தரவே விஜய், பெரியார் திடலுக்கு சென்றார். இவ்வாறு இடும்பாவனம் கார்த்திக் கூறினார்.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications