முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறு.. எடிட் செய்த போட்டோ.. நாம் தமிழர் காளியை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.

தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்வர் மீதும் மறைந்த தலைவர் கலைஞர் மீதும் திராவிட இயக்க தலைவர்கள் மீதும் ஆபாசமாக அருவருக்கதக்க வகையில் பதிவுகளை போட்டு வந்த நாம் தமிழர் கட்சி தருமபுரி பகுதியை சேர்ந்த சீமான் தம்பி என்று அழைக்கப்படும் காளி என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் ..

Naam Tamilar party member Kaali arrested by Tamil Nadu police for spreading fake news

இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ச்சியாக அடுக்கடுக்கான புகார்கள் வைத்து வந்தார். பொய்யான புகார்களை விடாமல் அவர் மீது வைத்து வந்தார்.

எல்லை மீறுதல்: அதோடு இல்லாமல் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை மார்ப் செய்து அதை தவறாக டிரெண்ட் செய்தார்.. முன்னாள் முதல்வர் கருணாநிதி முகத்தையும் இதேபோல் அவர் மார்ப் செய்து இருந்தார்.

ஆபாசமாக முதல்வர் புகைப்படத்தை சித்தரித்து இவர் போஸ்ட் செய்து வந்தார். நேற்று மாலை நாம் தமிழர் அலுவலகத்தில் இருந்த இவர்.. இரவு வீட்டிற்கு சென்ற போது கைதுக்கு உள்ளானார்.

இவரிடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவரின் மார்ப் செய்யப்பட்ட புகைப்படங்களுக்கு உதவியாக இருந்தது யார் என்பது தொடர்பாக விசாரணைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக திமுக - நாம் தமிழர் இடையே நடந்த மோதலுக்கு பின் அவர் இந்த போஸ்டுகளை செய்துள்ளார்.

சென்னை மாநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் எதற்காக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்? சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தில் லூலூ மால்தானே வரப் போகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் குறைந்துள்ளது. பயண தூரம் குறைந்ததால் கட்டணம் ரூபாய் 30 வரை கிட்டத்தட்ட குறைந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏற்கனவே புக் செய்தவர்களின் கட்டண வித்தியாசத் தொகையை நடத்துனர் வழங்குவார் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Naam Tamilar party member Kaali arrested by Tamil Nadu police for spreading fake news

கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகின்றன; கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் நிலையம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக கிட்டத்தட்ட சுமார் 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அங்கே மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+