‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
சென்னை: சென்னை நீலாங்கரையில் இன்று ஓட்டளித்துவிட்டு வெளியே வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேச மறுத்தார். ஆனால் சீமானை விடாமல் பின்தொடர்ந்த பெண் பத்திரிகையாளரால் கடைசியில் ட்விஸ்ட் ஏற்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பொதுமக்கள் மாலை 6 மணி வரை ஓட்டளிக்கலாம்.
இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்பட 13 வகையான ஆவணங்களை காண்பித்து பொதுமக்கள் வாக்களிக்கலாம். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி கயல்விழியுடன் வந்து ஓட்டளித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதன்பிறகு சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதலில் அவர் தமிழில் பேட்டியளித்தார். அதன்பிறகு அவர் புறப்பட தயாரானார். இந்த வேளையில் ஆங்கில செய்தி நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் சீமானிடம், ‛‛சார் இங்கிலிஷ்'' என கூறினார். அதற்கு சீமான் முடியாது என தனது தலையை அசைத்தார்.
இதையடுத்து உடனடியாக அந்த பத்திரிகையாளர், ‛‛ஹிந்தி'' என்றார். அதற்கு சிரித்தபடி சீமான், ‛‛நோ'' எனக்கூறி கிளம்பினார். ஆனால் அந்த பெண் பத்திரிகையாளர் சீமானை விடாமல், ‛‛சார் ஒரு வரியிலாவது சொல்லுங்கள் சார்'' என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து சீமான், அருகே இருந்த தனது மனைவி கயல்விழியை நோக்கி, ‛‛அம்மா.. கொஞ்சம் சொல்லுமா'' என்றார். ஆனால் அவரும் தயங்கினார்.
இதையடுத்து வேறு வழியின்றி சீமானே பதிலளிக்க தயாரானார். அப்போது பெண் பத்திரிகையாளர், ‛‛இன்று நீங்கள் ஓட்டளித்து உள்ளீர்கள். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?. மக்களுக்கு என்ன மெசேஜ் சொல்ல விரும்புகிறீர்கள்?'' என கேள்வி கேட்டார். அதற்கு சீமான், ‛‛நாங்கள் ஒரு பெரிய மற்றும் முழுமையான மாறுதலை எதிர்பார்க்கிறோம். அடிப்படை மாற்றத்தை நாங்கள் விரும்புகிறோம். அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். என் மக்கள் பேரார்வமாக வந்து வாக்கு செலுத்துவதை பார்க்க முடிகிறது. அப்படியென்றால் ஒரு மாறுதலுக்கான சிந்தனை, எண்ணம் இருப்பதை நான் நம்புகிறேன். உறுதியாக மாறும்'' என்றார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications