இதுக்குத்தான் நாம் தமிழர்கிட்ட மோதினாங்களா! 22 தொகுதியில் போட்டியிட ஆளே இல்ல! கதறும் கரும்பு விவசாயி
சென்னை: கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு பல்வேறு சின்னங்களில் போட்டியிட ஆளே கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல்; மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என்று பா.ம.ஐ.க தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சீமான் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.
உங்களுக்கு இந்த சின்னம் வேண்டும் என்றால் நீங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள். இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை. என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019 லோசபா தேர்தல் தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் போட்டி: நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தோடு அந்த கட்சி தற்போது தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாம். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டி போட முடிவு செய்துள்ளது., தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால் நாம் தமிழரிடம் சண்டை போட்டு சின்னத்தை வைத்துக்கொண்ட அந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு பல்வேறு சின்னங்களில் போட்டியிட ஆளே கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல்; மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என்று பா.ம.ஐ.க தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications