Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் - சீமான் - டிடிவி! 24 மணி நேரத்தில் தமிழக அரசியலே ஆடிப்போய்டுச்சே! அடுத்தடுத்து நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழக அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள், திருப்பங்கள், அதிரடி சம்பவங்கள் நடந்து உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில் ஏகப்பட்ட அரசியல் திருப்பங்கள் தினம் தினம் அரசியலில் நடந்து வருகின்றன.

Edappadi Palaniswami AIADMK Naam Tamilar Seeman Vijayalakshmi

சூடு பிடித்த விஜய் வருமான வரித்துறை வழக்கு

விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி காட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது.

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில், வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ், "வருமான வரிச் சட்டம் 271AAB(1) பிரிவின் கீழ் அபராதம் சரியாகவே விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

ஆனால், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அபராத நடைமுறைகள் ஜூன் 30, 2019-க்குள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஜூன் 30, 2022-ல் அல்ல என்பதால், கால அவகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறினார். இதற்கு நீதிபதி, கால அவகாசம் தொடர்பான இதேபோன்ற வழக்கில் அவர் அளித்த தீர்ப்பை அக்டோபர் 10, 2025-க்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டார்.

முன்னதாக, ரிட் மனுவின் பின்னணியை விளக்கிய வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ்,, 2015 செப்டம்பர் 30 அன்று விஜய்யின் இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின.

காசோலைத் தொகைக்கு மட்டுமே டி.டி.எஸ் (TDS) பிடித்தம் செய்யப்பட்டிருந்தது, ரொக்கப் பரிவர்த்தனைக்கு அல்ல. இந்த ஆவணங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, விஜய் ₹5 கோடி ரொக்கமாகப் பெற்றதை ஒப்புக்கொண்டு அதற்கான வரிகளைச் செலுத்த சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் கணக்கில் காட்டப்படாத வருமானம் எவ்வளவு என்று கேட்டபோது, புலி படத்துக்காகப் பெற்ற ₹5 கோடி தவிர வேறு எந்த ரொக்கத்தையும் பெறவில்லை என்று பதிலளித்தார். இருப்பினும், வருமான வரித்துறைக்கு ஒத்துழைக்கும் வகையிலும், வரிச் சிக்கல்களைச் சுமூகமாகத் தீர்க்கவும், 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை (₹5 கோடி ரொக்கப் பரிவர்த்தனை உட்பட) வெளிப்படுத்தவும், அதற்கான வரிகளைச் செலுத்தவும் நடிகர் ஒப்புக்கொண்டார்.

சீமான் வழக்கும் தீவிரம் அடைகிறது

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விஜயலட்சுமி தாக்கல் செய்த ஒரு வழக்கில், சீமான் அளித்த மன்னிப்பு மனு முறைப்படி இல்லாததால் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

முன்னதாக, சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் "மன்னிப்பு" என்ற வார்த்தையே இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சீமான் - விஜயலட்சுமி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு செய்யாவிடில், இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

நேற்று இந்த வழக்கில் வாதிட்ட விஜயலட்சுமி, சீமான் இப்போதும் தன்னைப்பற்றி தவறாகப் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டினார். அவர் தாக்கல் செய்த மன்னிப்பு மனுவில் உண்மையான மன்னிப்பு இல்லை, மாறாக வன்மமே தெரிவதாக விஜயலட்சுமி தெரிவித்தார்.

இதற்கு முன்பு, சீமான் விஜயலட்சுமியிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொண்ட சீமான் தரப்பு வழக்கறிஞர், விஜயலட்சுமியிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க சம்மதம் தெரிவித்தார்.

கடந்த வாரம் வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன.

ஜோதிமணி - செந்தில்பாலாஜி மோதல்

கரூர் காங்கிரஸ் நிர்வாகி சமீபத்தில் திமுகவில் இணைந்த விவகாரத்தில் திமுகவின் செந்தில் பாலாஜியை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கரூர் மாவட்டச்செயலாளர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியை அவமதிக்கிறார் என்றும் இந்த அவமரியாதையை எளிதில் கடக்க முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக இருந்தவர் கவிதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கரூர் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைத்து விவாதமானது. காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் இது தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கிடையே கரூர் எம்பி ஜோதிமணி இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காட்டமாக விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி காங்கிரஸை அவமானப்படுத்துவதாகவும் இதை எளிதாகக் கடந்து போக முடியாது என அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல, என்று கூறி உள்ளார்.

செங்கோட்டையன் தொடர் எழுச்சி

டிடிவி தினகரனை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்; அவரை சந்திக்கவே சென்றேன் என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.

முன்னதாக நேற்று சென்னை சென்றிருந்த செங்கோட்டையன், அடையாறில் டிடிவி தினகரனை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று டிடிவி, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் செங்கோட்டையன், அடையாறில் டிடிவி தினகரனை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசியதாக தகவல்கள் வெளியானது.. இதை டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+