நாம் தமிழராக தொடருவேன்- 'நீக்கப்பட்டோர் பிரிவில்' சேருவாரா? சீமான் கட்சியை உடைப்பாரா வெற்றிக்குமரன்?
சென்னை: நாம் தமிழர் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரும் சீமானின் தென் மண்டல தளபதியுமாக இருந்த வெற்றிக்குமரன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் தம்மை நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை என வெற்றிக்குமரன் சொல்லி இருப்பதுதான் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
நாம் தமிழர் ஒரு இயக்கமாக இருந்து பின்னர் கட்சியாக உருமாறியது. நாம் தமிழர் இயக்கம், கட்சி என ஒவ்வொரு படிநிலையிலும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பக்க பலமாக இருந்தவர் வெற்றிக்குமரன். இதனாலேயே சீமானின் தென் மண்டல தளபதி என அடையாளப்படுத்தப்பட்டார் வெற்றிக்குமரன்.

சீமானுக்கு அடுத்த நிலையில்.. : நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில்- அதாவது சீமானுக்கு அடுத்த பதவியில் இருந்தவர் வெற்றிக்குமரன். கடந்த சில மாதங்களாக கட்சியிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அண்மையில் மதுரையில் கட்சி சீரமைப்பு பணிகளில் சீமான் பங்கேற்ற போதுகூட வெற்றிக்குமரன் பங்கேற்கவில்லை எனவும் கூறப்பட்டது.
திடீர் நீக்கம்: இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் தாம் மதுரையில் பங்கேற்பதாக வெற்றிக்குமரன் அறிவித்திருந்தார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, வெற்றிக்குமரன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சீமானுக்கு அதிகாரம் இல்லை: இதனிடையே சீமானுக்கு 2 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கும் வெற்றிக்குமரன், அதன் இறுதியில், நீங்கள் என்னை அப்படி எல்லாம் நீக்கிவிட முடியாது; பொதுக்குழு கூடிதான் முடிவு செய்யனும் என குறிப்பிட்டுள்ளதுடன், வெற்றிக்குமரன் - மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி என்றே பதிவும் செய்துள்ளார். இதுதான் இப்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

நீக்கப்பட்டோர் பாசறை: உலகில் எந்த ஒரு கட்சியும் இல்லாத வகையில், நாம் தமிழர் கட்சியில் "நீக்கப்பட்டோர் பாசறை" என ஒன்று உள்ளது. அதாவது சீமானால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் அமைப்பு. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நீக்கப்பட்டோர் பாசறை என்ற பெயரில் கட்சி மாநாடுகளில், கூட்டங்களில் பங்கேற்பது இவர்கள் வழக்கம். இதனை சீமானும் பொது மேடைகளில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அடுத்து என்ன? : தற்போது வெற்றிக்குமரன், இந்த நீக்கப்பட்டோர் பாசறை பக்கம் திரும்புவாரா? அல்லது நாம் தமிழர் கட்சியை இரண்டாக உடைத்து தனி இயக்கம் அல்லது கட்சி தொடங்குவாரா? என்பதுதான் அந்த விவாதங்கள். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி பலமுறை பிளவுகளையும் 'நீக்கங்களை'யும் சந்தித்து உள்ளது. ஆனால் சீமானுக்கு எதிராக வலிமையான ஒரு இயக்கத்தையும் 'மாஜி' தம்பிகள் நடத்தியது இல்லை. திமுக, அதிமுகவில் இணைந்துதான் இருக்கிறார்கள். அதனால் வெற்றிக்குமரன் என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications