120-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களை கைப்பற்றிய நாம் தமிழர் கட்சி: சீமான் பெருமிதம்
Recommended Video
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 120-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி தலைவர் பதவிகளை நாம் தமிழர் கட்சி கைப்பற்றியுள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

2021 சட்டசபை தேர்தலை எப்படி வலிமையுடன் எதிர்கொள்வது, நீண்ட நெடுங்காலமாக தமிழ்த்தேசிய மக்கள் கொண்டிருக்கும் தன்னாட்சி உரிமை, தமிழீழ விடுதலை, கச்சத்தீவு மீட்பு, தமிழர் நில வளப் பாதுகாப்பு, தமிழக மக்களின் எதிர்கால பாதுகாப்பான நல்வாழ்வு இவை குறித்துதான் பொதுக்குழுவில் விவாதம். 2020-ன் தொடக்கத்தில், பொதுக்குழு கூடுவது புத்தெழுச்சி தருவதாக அமையும்.
இம்மாத இறுதியிலேயே சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும். 117 பெண்கள், 117 ஆண்கள் என 234 இடத்தில் சரி சமமாக, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை முடிவு.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்குப் பின்னடைவு என சொல்ல முடியாது. லோக்சபா தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம்.
உள்ளாட்சித் தேர்தலில் சாதி, பணம் அதிகமாக வேலை செய்யும். அதையெல்லாம் தாண்டி நாங்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
நாங்கள் லோக்சபா தேர்தலில் பெற்ற 4 சதவீத வாக்குகளில் இருந்து 10 சதவீதத்திற்கு முன்னேறியிருப்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி. ஊரகப் பகுதிகளில் எங்கள் கட்சி சென்று சேராத இடமில்லை என்பதே எங்களுக்கு வெற்றி.
120-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சி தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். பல இடங்களில் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை வென்றுள்ளோம். நாகர்கோவிலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியை எங்கள் கட்சி வென்றுள்ளது.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications