மக்களுக்கு தேவை மாற்றம்.. அந்த மாற்றமாக நாங்கள் இருப்போம்.. RK நகர் நாம் தமிழர் வேட்பாளர் நம்பிக்கை
சென்னை: 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அந்த மாற்றமாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்றும் ஆர்கே நகர் நாம் தமிழர் வேட்பாளர் கவுரி சங்கர் ஒன் இந்தியா இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்,
Recommended Video
வரும் சட்டசபை தேர்தலில் வழக்கம்போல நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்துக் களமிறங்குகிறது. இதில் ஆர்கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கவுரி சங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஒன் இந்தியா இணையதளத்திற்குக் கவுரி சங்கர் அளித்த சிறப்புப் பேட்டியில், 60 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் மக்களுக்குச் செய்யப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

ஆர்கே நகர் பகுதியில் 99 ஆண்டுகளாகக் குப்பைமேடு, போக்குவரத்து நெரிசல் குடிநீர் உள்ளிட்டவை முக்கிய பிரச்னையாக உள்ளதாகவும் அதைச் சரி செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பள்ளிகள் அருகில் இருக்கும் மதுக்கடைகளை முதலில் மூடுவேன் என்று தெரிவித்த அவர் பின்னர் படிப்படியாக மதுக்கடை இல்லாத தொகுதியாக ஆர்கே நகரை மாற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், முறையான வீட்டுமனை பட்டாக்கள் இல்லாத மக்களுக்கு அதை முறையாக வழங்குவேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாமலேயே அரசியலில் நுழைந்ததாகவும் நம் இனத்தின் விடுதலைக்காக நாம் தான் போராட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
60 ஆண்டுகளாக இருக்கும் திராவிடக் கட்சிகளை நாம் தமிழர் கட்சி வீழ்த்தும் என்றார். புதிய தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு உள்ளதாகத் தெரிவித்த அவர், மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அந்த மாற்றமாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்றும் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications