நான் முதல்வன் திட்டத்தில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி! பதிவு செய்ய அக்.25 கடைசி நாள்
சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய கடைசி நாள் வரும் அக்டோபர் 25 ஆகும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் இது போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு அதற்கான தகுதிகள் அளித்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இதற்கு நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் முதல்வன் திட்டத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜெர்மன் மொழி ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது என்றால், ஜெர்மனி நாட்டில் பல்வேறு துறைகளில் 1.7 மில்லியன் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள். எனவே வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக அங்கு செவிலியர் பணக்கான காலிப்பணியிடங்கள் 35 ஆயிரம் வரை உள்ளது. மேலும் ஜெர்மனியில் அடிப்படை ஊதியமே 2600 - 3400 யூரோ (இந்திய மதிப்பில் 2.36 லட்சம் முதல் 3.09 லட்சம் வரை ஆகும்). ஜெர்மனியில் செவிலிய உதவியாளர்கள், கேர் கிவ்வர்ஸ் ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
இதற்கான தகுதியானது பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு ஓராண்டுக்கு ஏதாவது ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கு 8 மாதத்திற்கான பி2 பிரொஃபிசியன்சி எனும் கோர்ஸ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஜெர்மனியில் பணியாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா:
- வேலைவாய்ப்பின்மை காப்பீட்டுடன் வேலைக்கு பாதுகாப்பு
- தாய், தந்தை இருவருக்குமே மகப்பேறு விடுமுறை
- பதிவு செய்யப்பட்ட செவிலியராகிவிட்டால் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதி
- மருத்துவ காப்பீடு
- மாதம் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை
- ஜெர்மனியில் பணியாற்றும் அனைவரது குழந்தைகளுக்கும் கல்லூரி வரை இலவச கல்வி
ஆகிய சலுகைகள் கிடைக்கும்.
இவையெல்லாம் கிடைக்க ஜெர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு வரும் 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பாடங்கள் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் தொடங்கும்.
வாரத்தில் 5 நாட்கள் என ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் நேரில் வந்துதான் பயிற்சி பெற வேண்டும். ஆன்லைனில் பயிற்சி பெற முடியாது. அது போல் பயிற்சி பெற்றதும் ஜெர்மனியில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினிஷிங் பள்ளி என்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தந்த துறைகளுக்கான பயிற்சிகளை வழங்கி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் ஒரு பள்ளியாகும். துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் உலக தரத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு உடனடி வேலைவாய்ப்புகள் உண்டாக்கி தரப்படுகிறது. அதற்கான சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications