திருச்சி சமயபுரம் அம்மன் கோயிலில் நிம்மதியா படுத்துட்டு இருந்த நதியா.. உடனே இப்படியா நடக்கணும்
சென்னை: தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த பக்தர் சமூகத்தையும் உலுக்கியுள்ளது. அம்மனை தரிசிக்க வந்த இடத்தில், இப்படியா நடக்கணும் என்று பக்தர்கள் நொந்து கொள்கிறார்கள்.. மேலும், கோயில் நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.. அப்படி என்ன நடந்தது?
சக்தி தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

குறிப்பாக, வேண்டுதல்களை நிறைவேற்ற பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், சன்னதி வீதி மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபங்களில் இரவு தங்கி ஓய்வெடுத்துவிட்டு, அதிகாலையில் அம்மனை தரிசிப்பது நீண்டகால நடைமுறையாக உள்ளது.
காலை நீட்டி படுத்திருந்த நதியா
அப்படித்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நதியா என்ற 32 வயது பெண், தனது உறவினர்களுடன் கோயிலுக்கு வந்துள்ளார். சன்னதி வீதியில் உள்ள மண்டபப் பகுதியில் அவர்கள் இரவு தூங்கி கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக நள்ளிரவில் அந்த மண்டபத்தின் காங்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நதியா மற்றும் அவருடன் இருந்த மற்ற இரு பெண்கள் மீது ராட்சத காங்கிரீட் சிலாபுகள் விழுந்தன. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த நதியா, சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். அருகில் இருந்த மற்ற பக்தர்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த மற்ற 2 பெண்களை மீட்டனர்.
பக்தர்கள் கொந்தளிப்பு
தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்த நதியாவின் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து சமயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி சன்னதி வீதி முழுமையாக மூடப்பட்டு, பேரிக்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தக் விபத்து பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 4 வருஷம்தான்
அதுவும் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வெறும் 4 வருஷம்தான் ஆகிறதாம்.. அதுக்குள்ளேயே ஒரு மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது எப்படி என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. புதிய கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தரக்கட்டுப்பாடு பின்பற்றப்பட்டதா அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தப் பலி நேரிட்டதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கோயில் நிர்வாகம் உடனடியாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க அனைத்துப் பழைய மற்றும் புதிய கட்டுமானங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. புண்ணியத் தலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட இடத்தில், ஒரு உயிர் பறிபோன சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications