செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் வருகிறாரா நாகஜோதி? எப்போது? அதிரடி காட்ட போகும் உச்சநீதிமன்றம்?
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விதித்த காலக்கெடுவுக்குள் விசாரிக்கத் தவறினால் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் அந்த குழுவின் தலைவராக நாகஜோதி நியமனம் செய்யப்படுகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் ஜூனியன் என்ஜீனியர், அசிஸ்டென்ட் என்ஜீனியர், ஜூனியர் டிரேட்ஸ்மேன், டிரைவர், கன்டக்டர் ஆகிய 5 பணிகளில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கணேஷ்குமார் என்பவர் கொடுத்தார். இந்த புகாரின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சிபிஐ, அமலாக்கத் துறை என தனித்தனியே 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நாகஜோதி மேற்கொண்டு வந்தார். அவர் 2 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிரான சில ஆதாரங்களையும் அவர் சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது 6 மாத கால அவகாசத்தை காவல் துறை கேட்டது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்சானுதீன் அமனுல்லா அமர்வு மறுத்து எதற்காக கால அவகாசம் என கேட்டனர்.
அதற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் 5 பிரிவுகளின் கீழ் மோசடி நடந்ததாக கூறப்படுவதால் அதுகுறித்து விசாரிக்கத்தான் கால அவகாசம் கேட்கிறோம் என சொன்னதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, உங்களுக்கு என்றைக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்திலும் விசாரணையை முடிப்பீர்கள், 24 ஆண்டுகளானாலும் விசாரணையை முடிக்காமல் இருப்பீர்கள் என காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக டிஜிபி, உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இந்த வழக்கு விசாரணையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள் என அவர்களே இங்கு வந்து சொல்லட்டும் என நீதிபதிகள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தனை கண்டிப்புக்கு பிறகு உச்சநீதிமன்றம் 2 மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது.
மேலும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஒரு வேளை செப்டம்பர் 30க்குள் தமிழக அரசு விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளக விசாரணை நடத்தி வந்த நாகஜோதி இரவோடு இரவாக ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஸ்டாலின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த கேஸ் விவரங்களை படித்து விசாரணையை தொடங்கி செப்டம்பர் 30க்குள் முடிப்பது என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு விசாரணை முடிவடையாத பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி, நேர்மையாக செயல்பட்ட நாகஜோதி மாற்றப்பட்ட விவகாரத்தையும் எஸ்ஐடி அமைப்பது குறித்தும் கோரிக்கை விடுப்பார்கள் என தெரிகிறது.
அவ்வாறு எஸ்ஐடி உருவாகும் பட்சத்தில் அந்த குழுவின் தலைவராக நாகஜோதியை நீதிபதிகளாகவே முன்வந்து நியமிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் எஸ்ஐடி தலைவராக நாகஜோதி நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications