ப்பா ஒரே மீன்தான்.. லட்சாதிபதியான நாகப்பட்டினம் மீனவர்.. வியக்க வைக்கும் சம்பவம்- எப்படி ஏலம் போனது?
சென்னை: நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் இடையே வைரலாகி உள்ளது.
பொதுவாக பல ஆயிரம் டீசல் செலவு செய்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன் எதுவும் கிடைக்காமல் வருவதும், சமயங்களில் லட்சக்கணக்கில் பிடித்துவிட்டு வருவதும் இயல்பான விஷயம். முடிந்த வரை எவ்வளவு மீன் பிடிக்க முடியுமோ பிடித்துவிட்டு வர வேண்டும் என்பதில் மீனவர்கள் உறுதியாக இருப்பார்கள்.
சமயங்களில் அதிர்ஷ்டவசமாக சில மீனவர்கள் விலை உயர்ந்த மீன்களை பிடித்து அதை அதிக விலைக்கு ஏலம் விடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் ஒரு மீனவர் 1 கோடி ரூபாய்க்கு மருத்துவ குணம் கொண்ட மீனை ஏலம் விட்டது குறிப்பிடத்தக்கது.

எப்படி
இந்த நிலையில்தான் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்த மீனவர் பெயர் ஜீவா. இவர் கடந்த வாரம் கடலுக்கு சென்றுள்ளார். மீன் பிடிக்க வலை வீசியவருக்கு சில நிமிடங்களில் பெரிய மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.

என்ன மீன்
அதிக எடையுடன் இருந்த மீனை சக மீனவர்கள் உதவியுடன் கப்பலில் தூக்கி போட்டுள்ளார். வலையை விரித்திவிட்டு மீனை பார்த்தவருக்கு ஆச்சர்யம். காரணம் அது கற்றாழை மீன். பொதுவாக... அவ்வளவு எளிதாக இது வலையில் சிக்காது. மிகவும் அரிதான வகை.

எடை
கரைக்கு திரும்பியவர் மீனை எடை போட்டு பார்த்து இருக்கிறார். மேலும் வியப்பு. காரணம் இது 25 கிலோ எடை இருந்துள்ளது. மீனை அப்படியே கூறு போட்டு விற்பனை செய்தால் கிலோ 700 ரூபாய் வரை மட்டுமே செல்லும். ஆனால் அவரோ அதை ஏலம் விட்டுள்ளார்.

சிங்கப்பூர்
ஏனென்றால் சிங்கப்பூர், மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் பல்வேறு மருந்துகள், வாசனை திரவியங்கள், தைலங்கள் தயாரிக்க இதன் அடிவயிற்றில் உள்ள திரவம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் விலை உயர்ந்த வைண் தயாரிக்கவும் இந்த திரவம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதை ஏலம் எடுக்க பலர் ஆர்வம் காட்டி உள்ளனர்.

ஏலம்
பலர் ஏலம் எடுக்க முன் வந்த நிலையில் இந்த ஒரு மீன் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது. சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக ஒருவர் இந்த மீனை 2.30 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் இடையே வைரலாகி உள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications