போட்டுத் தள்ளு.. செலவ நான் பாத்துக்குறேன்! அஸ்வத்தாமனுக்காகவா ஆம்ஸ்ட்ராங் கொலை? நாகேந்திரன் பரபர
சென்னை: ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் தனது மகன் அஸ்வத்தாமன் கைதாக ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் தான் ஆத்திரத்தில் இருந்து வந்ததாகவும், அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வர ஆம்ஸ்ட்ராங்கை கொலை திட்டத்தை அரங்கேற்றியதாக பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் பிரபல ரவுடியான நாகேந்திரன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆம்ஸ்ட்ராங் பெரிய நபராக வலம் வந்திருக்கிறார். இது வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நாகேந்திரனுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கொலை திட்டம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி நாகேந்திரன் அளித்த வாக்குமூலத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில்," ஆம்ஸ்ட்ராங் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் எதிரியாக இருந்தார். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட பலர் ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது தொடர்பான திட்டத்தை வழக்கறிஞர் அருள் வகுத்திருப்பதாக எனது மகன் அஸ்வத்தாமன் என்னிடம் கூறினார். குரோம்பேட்டை மருத்துவமனையில் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக என்னை அழைத்து வந்தனர். அப்போதுதான் என்னை சந்தித்த மகன் இந்த திட்டம் குறித்து தெரிவித்தான்.
இதுதான் நல்ல வாய்ப்பு அவர்களை கொலை செய்ய சொல்.. எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொன்னேன். கொலை வழக்கில் நாங்கள் நேரடியாக களமிறங்கினால் பிரச்சனை வரும் என்பதால் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டோம். மேலும் ஐஓசி காண்ட்ராக்டர் ஆன ஜெயபிரகாசை எனது மகன் அஸ்வத்தாமன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்டான்.
இதற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என எனக்கு தெரிய வந்தது. இதனால் எனக்கு கோபம் வந்தது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை எச்சரிக்கை செய்ய விரும்பி அவரது ஆதரவாளரை அழைத்து, அஸ்வத்தாமனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எந்த லெவலுக்கும் இறங்குவேன் என எச்சரித்தேன். மேலும் எனது மகன் அரசியலுக்கு வந்தாலும் முன்னேறாமல் இருப்பதற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம். எனவே தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்" என பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications