சென்னை டூ குமரிக்கு காரில் பயணம்.. மாணவியை ஏமாற்றி நட்டநடு சாலையில் காரில் உல்லாசமாக இருந்த காசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைச் சேர்ந்த மாணவியை மிரட்டி நாகர்கோவில் காசி பணம் பறித்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (27). இவர் பெண்களுடன் நெருங்கி பழகியதோடு ஆபாச புகைப்படம் எடுத்து அதை அந்த பெண்களிடம் காட்டி பணம் பறித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் புகார் கொடுத்ததன் பேரில் காசி மீது 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலித்து ஏமாற்றம்

காதலித்து ஏமாற்றம்

இந்த நிலையில் காசி தன்னை காதலிப்பது போல நடித்து ஏமாற்றியதோடு பணத்தையும் மிரட்டி பறித்துவிட்டதாக சென்னை மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காசியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காசிக்கு பழக்கம்

காசிக்கு பழக்கம்

முதற்கட்ட விசாரணையில் சென்னை மாணவியுடன் காசிக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும் அவரை காசி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பதும் குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையைச் சேர்ந்த அந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக காசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பழக்கம்

இன்ஸ்டாகிராமில் பழக்கம்

இருவரும் இன்ஸ்டாவில் பேசி பழகினர். பின்னர் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி காசி நேரில் சென்னைக்கு சென்று அந்த மாணவியை சந்தித்துள்ளார். மேலும் அந்த மாணவியும் சென்னையிலிரு்து கன்னியாகுமரிக்கு வருமாறு கூறியுள்ளார். அப்போது 4 வழிச்சாலையில் காரை நிறுத்திவிட்டு ஆசை வார்த்தைகள் கூறி காரில் வைத்தே உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

செல்போன்

செல்போன்

அந்த நேரத்தில் தனது கைக்கடிகாரம் மற்றும் செல்போன் மூலம் ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டார். மேலும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவியிடம் பணம் பறிப்பு செயலிலும் ஈடுபட்டுவிட்டார். இது தொடர்பான விவரங்களை அந்த மாணவி தனது புகாரில் கூறிவிட்டார்.

லேப்டாப்

லேப்டாப்

மாணவியிடம் இருந்து எவ்வளவு பணத்தை காசி மிரட்டி பறித்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லேப்டாப்பில் முக்கிய தகவல்கள் உள்ளதா என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+