இந்திய தேசிய லீக் மாநில தலைவராக எம்.நாகூர் ராஜா நியமனம்! அகில இந்திய கவுன்சில் அறிவிப்பு
சென்னை: இந்திய தேசிய லீக்கின் தமிழக நிர்வாக குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய மாநில தலைவராக எம்.நாகூர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய கவுன்சில் அறிவித்துள்ளது.
மாநில துணை தலைவர்களாக பஷீர் அகமது, முகம்மது இக்பால் பாஷா. மாநில பொதுச் செயலாளராக சையத் சாதான் அகமது, மாநில பொருளாளராக முகம்மது ரஹமத் அலி, மாநில செயலாளர்களாக முகம்மது கான், புதுக்கோட்டை பென்ஸ் ஜாகீர், கோவை சிராஜூத்தீன், ஸ்டார் பாஷா ஆகியோர் நியமிக்கப்படுவதாக இந்திய தேசிய லீக் அகில இந்திய கவுன்சில் அறிவித்துள்ளது.

நிர்வாக குழுவில் 20 புதிய உறுப்பினர்களையும் அகில இந்திய லீக் தேசிய கவுன்சில் நியமித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகளுக்கு, கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அகில இந்திய லீக் தேசிய கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications