"வெள்ளை புறா" பறக்குதா.. பலே எடப்பாடி.. சீமானால் சிதறுமா திமுக ஓட்டு? நயினார் நாகேந்திரன் வீசிய வெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணியும் இன்னும் முடிவாகாத சூழலில், அதற்கான துரித முயற்சியில் இறங்கி வருகிறாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மெகா கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வரும்நிலையில், தனித்துதான் போட்டியிடும் நிலைமை வந்துவிடுமோ என்ற கலக்கம் சூழ்ந்துள்ளதாம்.

Nainar Nagendran BJP and Can Edappadi Palanisamy alliance with BJP or Naam Tamizhar Party Seeman

கூட்டணி: சொந்த கூட்டணியிலும், இன்னும் எந்த கட்சியுமே பச்சைக்கொடி காட்டவில்லை.. அனைவருக்கும், பொதுவான நண்பரான, ஜிகே வாசன்கூட, இப்போதைக்கு எந்த தேர்தல் முடிவையும் அறிவிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். தேமுதிக, பாமக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை. திமுக கூட்டணிக்கு செல்வதானால், பாமகவுக்கு குறைந்தது 5 அல்லது 6 சீட்டுக்களையாது ஒதுக்கியே தீரவேண்டும்.. அதற்கு திமுக மேலிடம் ஒப்புக்கொள்ளுமா தெரியாது.

வாசன், ஏசி சண்முகம், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் என பலரும் இணைந்தே கூட்டணியில் போட்டியிட்டாலும்கூட, திமுக கூட்டணி பலத்தை ஈடுசெய்ய முடியாது என்கிறார்கள்..

சரியும் வாக்குவங்கி: அதுமட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்பு, பாஜக தரப்பில் ஒரு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கடந்த தேர்தலைவிட, தற்போது அதிமுகவுக்கு வாக்கு வங்கி குறைந்துவிட்டதாம்.. அதாவது ஒருங்கிணைந்த அதிமுக இருந்தபோதே, கடந்த முறை ஆட்சியை தவறவிட்டது. இப்போது, கட்சி 3 துண்டாக பிரிந்துவிட்டதால், வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

எனவே, மெகா கூட்டணி என்று இல்லாவிட்டாலும்கூட, திமுகவை சமாளிக்கக்கூடிய அளவுக்காவது கூட்டணி இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.

சீமான் தயக்கம்: இதற்காகத்தான் சீமானுக்கு வலையை வீசிவருவதாக தெரிகிறது.. ஆனால், அதிமுக கூட்டணிக்குள் வர சீமானுக்கு தயக்கம் இருக்கிறது.. காரணம், திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளையுமே சீமான் விமர்சித்து வருவதால்தான், இந்த 3 கட்சிகளின் அதிருப்தி வாக்குகளை நாம் தமிழர் கட்சியால் பெற முடிகிறது.. இப்போது கூட்டணி வைத்து போட்டியிட்டால், வாக்கு வங்கியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறாராம்.

ஆனால், சீமானை கூட்டுக்குள் கொண்டுவந்தால், தன்னுடைய பிரச்சாரங்களில் பாஜகவை கடுமையாக விமர்சிப்பார், இதனால், சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் அதிமுகவுக்கு உயரும் என்று எடப்பாடி தரப்பு நம்புகிறதாம். மேலும் தனித்து போட்டியிட்டு வருவதால், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், வாக்கு வங்கியும் கணிசமாக உயர்ந்து வருவதால், இதையும் சாதகமாக்கி கொள்ள அதிமுக மேலிடம் கணக்கு போடுகிறதாம்.

பிம்பம்: அதுமட்டுமல்லாமல், மெகா கூட்டணி என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டுமானால், தமிழகத்தில் 3வது இடத்தை பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சி போன்ற பெரிய கட்சியின் தயவும் தேவை என்றும் நினைக்கிறாராம்.

மற்றொருபுறம், திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும், சிறுபான்மையினர் வாக்குகளையும் உடைக்க நினைக்கிறாராம். இதற்காகவே, சிறுபான்மையினருக்கான அறிவிப்புகள், நலத்திட்டங்கள், அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அத்துடன், தனக்கு ஆதரவு தந்த சிறுசிறு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து, தேர்தலில் சீட் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

நயினார் நாகேந்திரன்: இதற்கு நடுவில், பாஜகவின் வியூகம் என்னவென்று தெரியவில்லை.. 5 மாநில தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில், பாஜக மேலிடம் தமிழக அரசியல் பற்றி இன்னும் பேச்சையே எடுக்கவில்லை.. பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருக்கிறார்.

அதில், "பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அழைத்து பேச, பாராளுமன்ற தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யும்... தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்தவர்கள் இப்போது நாங்கள் கூட்டணியில் இல்லை என்று சொல்வதற்கு காரணம், நாங்கள் அவர்களை அழைத்து பேச வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான்" என்று நயினார் புதுகுண்டை தூக்கி போட்டுள்ளார். அப்படியானால், அதிமுக கூடாரத்தில், "வெள்ளைக்கொடி" பறக்க போகிறதா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+