திருமாவளவன் - வழக்கறிஞர் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு.. நாங்கதான் காரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமாவளவனின் கார், வழக்கறிஞரின் பைக் மீது மோதியதாக பிரச்சனை எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் பாஜகவையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இதெற்கெல்லாம் நாங்கள் எப்படி காரணமாக முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்" என்று திருமாவளவன் தனது x பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Nainar Nagendran Thirumavalavan BJP

இது அரசியல் தளத்தில் விவாதங்களை கிளப்பியிருந்தது. கமல்ஹாசன் உள்ளிட்டோர் திருமாவளவனின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று கூறியிருந்தனர். அவர் கேட்டுக்கொண்டதை போல உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, "திருமாவளவனின் கார் மோதியதாக கூறப்பட்ட சம்பவத்தில், ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டிருக்கிறார். தாக்கியவர்கள் திருமாவளவனின் ஆட்கள். இதற்கும் ஆர்எஸ்எஸ், பாகஜவுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? அடிச்சது அவங்க. நாங்க சொல்லி திருமாவளவன் ஆட்கள் அடித்தார்கள் என்று சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

அப்படி சொன்னார் எனில், திருமாவளவன் எங்கள் கூட்டணிக்கு வந்துவிட வேண்டியதுதானே! நீங்கள் அவரிடம் கேட்டு சொல்லுங்களேன். அடித்தது அவர்கள்தானே! அதனால் அவர்களுக்கு தண்டனை உண்டு" என பேசியிருக்கிறார்.

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் விசிகா சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது, திருமாவளவன் சென்ற கார் சென்னை ஐகோர்ட் அருகே, வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது உரசியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து பைக்கில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவனின் கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக திருமாவளவன் ஆதரவாளர்கள் அந்த வழக்கறிஞர் இடையே சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+