Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.4 கோடி கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை.. நயினார் நாகேந்திரன் பணமா?.. மவுனம் கலைத்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளர் பாஜகவின் நயினார் நகேந்திரன் ஹோட்டல் ஊழியர்களிடம் ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலர் பணம் கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரயிலின் குளிர்சாதன பெட்டியில் ரூ.4 கோடி கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Nainar Nagendran explains he has nothing to do with the seized 4 crore money Says TN BJP Annamalai

லோக்சபா தேர்தலையொட்டி வாக்களார்களுக்கு வினியோகிக்க இந்த பணம் நெல்லைக்கு கடத்தப்பட இருந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இங்கு கைப்பற்றப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கொடுப்பதாக எடுத்துச்செல்லபட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியது.

அண்ணாமலை பேட்டி: ஏனென்றால், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ் என்பதாலும், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்றதாலும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன், இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும், எனக்கும் தொடர்பு இல்லை. யாராவது புகார் கொடுத்தால் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை" என்று விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை பதில் கூறியதாவது:-

பேசுவதற்கு எதுவும் இல்லை: இது சம்பந்தமாக நம்முடைய நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். எனக்கும் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரனே சொல்லிவிட்ட பிறகு இது பற்றி இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இருக்கிறார்கள்..

சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சினை இல்லை. நயினார் நாகேந்திரன் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிய பிறகு எதிர்க்கட்சிகள் இதில் விமர்சனம் செய்வதற்கு என்ன இருக்கிறது. ஒரு சதி வேலையில் அவரது பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது" என்றார்.

அண்ணாமலை பதில்: பாஜக வேட்பாளர்கள் 20 பேரது வீடுகளிலும் சோதனை செய்ய வேண்டும் என்று திமுகவின் ஆர் எஸ் பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:- அதாவது எப்படியென்றால், திருடன் ஒரு வீட்டில் திருடும் போது போலீஸ்காரர்கள் அந்த வீட்டை நோக்கி போவாங்க.. அப்போது போலீஸ்காரர்கள் வருவதை அறிந்து வீட்டை விட்டு வெளியே வந்து திருடன், திருடன் திருடன் என்று கத்துவான்..

உண்மையான திருடன் யார் என்றால்: அப்போது போலீஸ் வீட்டிற்குள் சென்று தேடிவிட்டு திருடனை காணவில்லை என்பார்கள். இங்கே திருடன் ஓடிபோயிருப்பான். இது தான் இன்று திமுக. அதாவது தேர்தல் வரும் போது திமுக செய்கிற எல்லா தவறையும் தேர்தல் ஆணையம், காவல்துறையினர் பார்க்க கூடாது என்பதற்காக ஆர் எஸ் பாரதி திருடன்.. திருடன் என்று ஓடிக்கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையான திருடன் யார் என்றால் அது திமுக தான் என்பது தெரியும்.

காவல்துறையை குழப்புவதற்கு: கோவையில் 88 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஓட்டு போட்டால் என்ன கொடுக்கிறார்கள். தங்க தோடு, 2000 ரூபாய் பணம். அடுத்து இன்னும் 10 நாட்களில் என்னென்ன இலவசங்களை திமுக கொடுக்க போகிறது என்பதை அம்மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். பணத்தை பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால் அது திமுகவுக்கு தான். ஆர் எஸ் பாரதியின் வாதம் என்பது, வீட்டில் இருந்து ஒரு திருடன் ஓடி வந்துவிட்டு காவல்துறையை குழப்புவதற்கு வாசலில் நின்று திருடன்.. திருடன்.. என்று சொல்வது போல இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர் எஸ் பாரதி புகார்: முன்னதாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நெல்லை லோக்சபா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இதனால், இவருக்கு சொந்தமான இடங்களில் மட்டும் அல்லாது பாஜகவின் அனைத்து வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+