நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வரலாம் - அழைப்பு விடுக்கும் ஆர்பி உதயகுமார்

நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வருவாய் துறை அமைச்சர். ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் மீண்டும் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தகுதி, திறமை, செல்வாக்கு கொண்டவர்கள் அதிமுகவிற்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran should join AIADMK - RB Udayakumar call

அதிமுக முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில துணைத்தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது என்றாலும் மாநில பாஜக தலைவர் பதவி மீது ஒரு கண் வைத்திருந்தார் நயினார் நாகேந்திரன்.

இதற்காக பலமுறை டெல்லிக்கு படையெடுத்து வாரக்கணக்கில் தங்கி தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அது எதுவும் பலிக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாஜகவில் மன வருத்தத்தில் இருக்கிறேன் என்றும், நம்பிக்கையோடு பாஜகவுக்கு வந்தவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். தலைமை மீது தமக்கு மன வருத்தம் இருந்தாலும் கட்சி மாறப்போவதில்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில், வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்!கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு என்று பதிவிட்டுள்ளார்.

Nainar Nagendran should join AIADMK - RB Udayakumar call

நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும் என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார் நயினார் நாகேந்திரன்.

இதனிடையே இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் மீண்டும் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தகுதி, திறமை, செல்வாக்கு கொண்டவர்கள் அதிமுகவிற்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விடுத்துள்ள அறிக்கைக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர மொழி கற்றுக்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+