தமிழக பாஜக புதிய தலைவரானார் நயினார் நாகேந்திரன்!
சென்னை: தமிழக பாஜக புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட விழாவில் அவர் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கையில் டெல்லி பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் இன்றைய தினம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெற்றது.

இதற்கான விருப்பமனுக்களை நேற்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் 10 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக இருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
இதனால் 8 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்வாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி தலைமையிடம் சிறப்பு அனுமதி பெற்று அவர் தாக்கல் செய்தார்.
பாஜக அலுவலகத்தில் நடந்த விருப்பமனு பெறும் நிகழ்வில் அவர் தாக்கல் செய்த போது வானதி, எச்.ராஜா, முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், கேபி ராமலிங்கம், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர்.
அதை பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் பெற்றுக் கொண்டார். நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளதால் எனவே அவர் 13 ஆவது மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக பாஜகவின் சட்டவிதிகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபுதி பேலஸில் நிகழ்ச்சியில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவில் முதல் முறையாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மாநில தலைவராக நியமிக்கப்படுகிறார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications